எரிபொருள் விலை சூத்திரக் குழு இன்று கூடுகின்றது | தினகரன்


எரிபொருள் விலை சூத்திரக் குழு இன்று கூடுகின்றது

மாதாந்தம் மேற்கொள்ளப்படுகின்ற எரிபொருள் விலை திருத்தம் தொடர்பாக, எரிபொருள் விலை சூத்திரக் குழுவானது நிதியமைச்சில் இன்று (13)  கூடவுள்ளது.

எரிபொருள் விலை சூத்தித்திற்கமைய எரிபொருள் விலை திருத்தம் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டுமானாலும்,  இம்மாதம் 10 ஆம் திகதி சனிக்கிழமை என்பதாலும், மீதமுள்ள இரண்டு நாட்கள் வார விடுமுறை என்பதாலும், இந்த விவகாரம் இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்தது.

மாதாந்த எரிபொருள்  விலை சூத்திரத்திற்கமைய, கடந்த மாதம் எரிபொருள் விலையில் சரிவு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் பெற்றோல் 92 இனது விலை ரூபா 2 இனாலும், ஒக்டேன் 95 இனது விலை ரூபா 5 இனாலும், சுப்பர் டீசலின் விலை ரூபா 5 இனாலும் குறைக்கப்பட்டிருந்தன.

ஆயினும் ஒட்டோ டீசலின் (Auto Diesel) விலையில் மாற்றம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...