கடுங்காற்றுடன் மழை நீடிக்கும் சாத்தியம் | தினகரன்


கடுங்காற்றுடன் மழை நீடிக்கும் சாத்தியம்

அடுத்த 36 மணி நேரத்தில் மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேற்கு மாகாணங்களில் காற்று மணிக்கு 50முதல் 60கிலோ மீற்றர் வேகத்தில் திடீரென அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் அதேநேரம், வட மத்திய மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்று மணிக்கு 40முதல் 50கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.  

அதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை இடைக்கிடை பெய்யும். அத்துடன் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் குறைந்த அளவில் மழை பெய்யக் கூடும்  அதேநேரம் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை அவதான நிலையம்   கூறியுள்ளது.  மழை பெய்யும் பொழுது பலத்த காற்று வீசக் கூடும் அதேநேரம், மின்னல் மற்றும் இடி தாக்குதல்களில் இருந்து பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டுமென்றும் வானிலை அவதான நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.   


Add new comment

Or log in with...