பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு விசேட புலமை பரிசில் திட்டம் | தினகரன்


பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு விசேட புலமை பரிசில் திட்டம்

வடக்கு ஆளுநர் அறிவிப்பு

வடக்கு மாகாணத்தில் தாய்,தந்தை இருவரையும் இழந்த பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காக புலமைபரிசில் திட்டம் ஒன்றினையும்,விசேடதேவையுடையோர் மற்றும் பாடசாலை மாணவிகளுக்கான தனிப்பட்ட பேருந்து சேவை ஒன்றையும் ஆரம்பிக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் பெற்றோர் அதாவது தாய்,தந்தை இருவரையும் இழந்த பிள்ளைகளுடைய கல்வி மேம்பாட்டுக்காக புலமைபரிசில் ஒன்றை உருவாக்க திட்டமிட்டு அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் 5 மாவட்டங்களிலும் தாய்,தந்தையை இழந்த பிள்ளைகள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு மாவட்ட மட்டத்தில் அந்த திட்டம் செயற்படுத்தப்படும்.

அதேபோல் விசேடதேவையுடையோர் மற்றும் பாடசாலை மாணவிகளுக்காக விசேட பேருந்து ஒன்றை யாழ்ப்பாணம்- கிளிநொச்சி மாவட்டங்களுக்கிடையில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசேடதேவையுடையோருக்கான வசதிகளுடன் கூடியதாகவும், பாடசாலை மாணவிகள் பாதுகாப்பாக பயணிக்க கூடியதாகவும் இந்த பேருந்து அமைந்திருக்கும்.

ஆசனங்கள் இல்லாமல், சக்கரநாற்காலியுடன் ஒருவர் அப்படியே பேருந்துக்குள் ஏறி பாதுகாப்பாக பயணிக்க கூடிய வகையில் பேருந்து அமைந்திருக்கும். இந்த பேருந்து சேவையும் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்

 


Add new comment

Or log in with...