பல வழக்கின் பிரதிவாதியை வேட்பாளராக்கியமை தவறு | தினகரன்


பல வழக்கின் பிரதிவாதியை வேட்பாளராக்கியமை தவறு

கட்சியின் யாப்பிற்கு முரணாக செயற்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் சட்டவாட்சியை  பாதுகாப்பார் என்று எவ்வாறு நம்பமுடியும்? என அமைச்சர் கபீர் ஹாசிம் கேள்வி எழுப்பியுள்ளார்.  

 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திப் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டு எம்.பி. பதவி வகிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்துகொண்டு அதில் தமது சகோதரருடன் இணைந்து புதிய அரசியல் கட்சியை உருவாக்கியுள்ளார்.  

நேற்றைய தினம் அதன் தலைவர் நியமிக்கப்பட்டு கட்சியின் யாப்பிற்கு முரணாக இவ்வாறு செயற்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் சட்டவாட்சியைப் பாதுகாப்பார் என்று எவ்வாறு நம்பமுடியும் என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.  

அதேபோன்று பல்வேறு குற்றங்களுக்கு நீதிமன்றத்தில் பிரதிவாதியாகவுள்ள அமெரிக்க பிரஜையான தமது சகோதரரை புதிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அவர் நியமித்திருப்பது நாட்டின் சட்டத்தை மீறிய செயல் மட்டுமன்றி நாட்டு மக்களை திசை திருப்பும் வகையில் செயற்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் விசேட அறிக்கை யொன்றை வெளியிட்டுள்ள அவர்: 

இலங்கையின் பழைமையான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தமது ஜனாதிபதி வேட்பாளரை விரைவில் ஜனநாயக முறைப்படி நியமிக்கும்.  அதனையடுத்து மக்களுக்கு அதனைப் பகிரங்கமாக வெளிப்படுத்துவோம். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்சியின் ஒருமித்த இணக்கப்பாட்டுடனையே அது இடம்பெறும். நாம் தாய்நாட்டை நேசிக்கின்ற ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)   


Add new comment

Or log in with...