உடற் பருமன் அதிகரிப்பதற்கான காரணங்கள் | தினகரன்

உடற் பருமன் அதிகரிப்பதற்கான காரணங்கள்

தற்போதைய காலகட்டத்தில் உடற் பருமனினால் அவதிப்படுவோர் ஏராளமானோர் உள்ளனர். இவ்வாறு உடற் பருமன் அதிகரிப்பதற்கு எம்மில் காணப்படும் பழக்கவழக்கங்களும் காரணமாகின்றன. இருந்த போதிலும், சிலருக்கு திடீரென உடற் பருமன் அதிகரிக்கின்றது. இதற்கு சில காரணங்களும் உள்ளன. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்வோம்.  

தைராய்டு குறைபாடு, தைராய்டு குறைவாக இருப்பின் எடை கூடும். 

அதிகம் உட்கொள்பவர்களுக்கு உடற் பருமன் கூடியவாறேஇருக்கும். 

பலர் தாகம் எடுப்பதனை பசி என்று எண்ணி தண்ணீருக்குப் பதிலாக உணவு எடுத்துக்கொள்வர். இதனால் இவர்கள் அதிக எடை கூடி விடுவர். ஆக போதியளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும் எடை கூடுவதற்கு ஒரு காரணம் ஆகும். 

என்னதான் அளவாக முறையாக சாப்பிட்டாலும் அதிக மனஉளைச்சல், மனச்சோர்வு, உடல் சோர்வு இவை இருந்தாலும்,நாம் உணராமலேயே அதிக உணவினை அல்லது ஏதாவது நொறுக்குத் தீனியினை நாம் எடுத்துக் கொள்வோம். எனவே மன உளைச்சல், மனச்சோர்வு, உடல் சோர்வு இல்லாது எம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும். 

சிலருக்கு உணவில் உப்பு சற்று தூக்கலாக இருக்க வேண்டும். ஊறுகாய், அப்பளம், சிப்ஸ், இல்லாமல் சிலருக்கு இருக்க முடிவதில்லை. உப்பு உடலில் நீர் தேக்கத்தினை ஏற்படுத்தி உடல் எடையினைக் கூட்டும். 

கருத்தடை மாத்திரைகள் கூட, உடற் பருமன் அடையச் செய்யும்  வாய்ப்புகள் அதிகம். மருத்துவ ஆலோசனைப்படியே கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். 

நன்கு உடற்பயிற்சி செய்து விட்டு சர்க்கரை, அதிக கொழுப்பு உணவுகளை உட்கொள்வது தவறு, புரத உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். 

அவசியமான சத்துகள் உணவில் இல்லாவிடில்உடற் பருமன் கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

மிக அதிக உடற்பயிற்சியும் தவறே. 

தேவையான அளவு ஆழ்ந்த உறக்கம்இல்லாவிடில் உடற் பருமன்கூடும். 

புரதம் குறைந்த உணவு உடற் பருமனைக்கூட்டும். 

சிலர் உட்கார்ந்த இடத்தில் காலை முதல் மாலை வரை அசையாது உட்கார்ந்திருப்பர். இவர்களுக்குஉடற் பருமன்கூடிக் கொண்டே போகும். 

வயது கூடும் பொழுது சற்று எடை கூடும். ஆக சில சாதாரண தவறுகளை சிறு முயற்சி எடுத்து திருத்திக் கொண்டாலே நாம் அளவான எடையோடு இருக்கலாம். 

 

 


Add new comment

Or log in with...