மன்னாரில் 461.7 கி.கி. பீடி இலைகள் மீட்பு | தினகரன்


மன்னாரில் 461.7 கி.கி. பீடி இலைகள் மீட்பு

மன்னார், ஒழுதுடுவை கடற்கரைப் பகுதியில் 461.7 கிலோகிராம் பீடி இலைகள்  கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் இன்று (12) கடற்படையினர் நடத்திய சோதனையின்போது, இப்பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இப்பீடி இலைகள் 09 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்ததோடு, குறித்த கடற்கரையோரத்தில் அவை கரை ஒதுங்கிக் காணப்பட்டதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள பீடி இலைகள், மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ். சுங்கத் திணைக்களத்தினரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...