சேரனுக்கு ஒரு நியாயம் எனக்கு அநியாயம் | தினகரன்


சேரனுக்கு ஒரு நியாயம் எனக்கு அநியாயம்

பிக் ​பொஸ் நிகழ்ச்சியில் இருந்து ன்னை அவப்பெயருடன் வெளியேற்றியதால்  நடிகர் சரவணன் வேதனை அடைந்துள்ளார்.  பேருந்தில் பெண்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட விவகாரத்தில் நடிகர்  சரவணனை பிக் ​பொஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றி  இருக்கின்றனர். ஏற்கனவே நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட பிறகும்,  அவமானப்படுத்தும் வகையில் அவரை வெளியேற்றியது மக்களை அதிர்ச்சி அடைய  வைத்துள்ளது.  இந்நிலையில், இரவோடு இரவாக பிக் ​ெபாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட  சரவணன், சில ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருப்பதாகத் தெரிகிறது.  அதில் பிக்  ெபாஸ் வீட்டில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து அவர் வேதனை  தெரிவித்துள்ளார்.

மேலும் அப்பேட்டியில், ‘பிக் ​ெபாஸ் வீட்டில் சேரன் பற்றி மீரா புகார் கூறினார். அப்போது, சேரனுக்கு ஆதரவாகவே பிக் ​ெபாஸ் குழு நடந்து கொண்டது. அந்த வாரம் மீரா வெளியே அனுப்பப்பட்டார். இதன் மூலம் சேரனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாமல் அவர்கள் பார்த்துக் கொண்டனர். ஆனால் என் விவகாரத்தில் அப்படி அவர்கள் நடந்து கொள்ளவில்லை. 

பிக் ​ெபாஸ் வீட்டிற்குப் போனால், ஒரு சில வாரங்கள் தங்கி இருக்கலாம். அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் புதிய வாழ்க்கையை தொடங்கலாம் என நினைத்திருந்தேன். ஆனால், இப்படி அவப்பெயருடன் என்னை வெளியில் அனுப்புவார்கள் என எதிர்பார்க்கவில்லை. இந்த மாதிரி நடக்கும் எனத் தெரிந்திருந்தால் பிக் ​ெபாஸ் நிகழ்ச்சிக்கே வந்திருக்க மாட்டேன். 

இந்த விவகாரம் தொடர்பாக என் மீது யாரும் பொலிசில் புகார் அளித்துள்ளதாகத் தெரியவில்லை. நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட பிறகும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இப்படி நடந்து கொண்டது சரியில்லை.

சக போட்டியாளர்களுக்குக்கூட நான் ஏன் வெளியேற்றப் பட்டேன் என்ற காரணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வெளியில் வந்த பிறகுதான் தெரிந்து கொள்வார்கள்" என அவர் தெரிவித்துள்ளார். 

 


Add new comment

Or log in with...