வேனை கடத்தியவர் மீது துப்பாக்கிச் சூடு; பலி | தினகரன்


வேனை கடத்தியவர் மீது துப்பாக்கிச் சூடு; பலி

வேனொன்றை கடத்திச் சென்ற வேளையில் பின்வத்தை சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மத்தேகொடை, கிரிகம்பமுணுவ பகுதியிலிருந்து  வேனொன்றை கடத்திச் சென்றதாக கூறப்படும் நபரை கைது செய்யும் முகமாக பாணந்துறை, பின்வத்த சோதனைச் சாவடியில் நேற்றிரவு (29) இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இத்துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய கொட்டகொடகே பிரியந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து தப்பிச்செல்ல முற்பட்ட மற்றைய  சந்தேகநபர் பிங்வத்த பகுதியில் வைத்து, கைதுசெய்யப்பட்டுள்ளார்.

37 வயதான சலுய நிகோ சாந்த என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, தற்போது பாணந்துறை வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...