சிம்பாப்வேயுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை நிறைவு செய்திருக்கும் இலங்கை அணி எதிர்வரும் பெப்ரவரி 02 ஆம் திகதி தொடக்கம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஆடவுள்ளது.
இதற்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதி இலங்கை வரும் ஆப்கானிஸ்தான் அணி பெப்ரவரி மாதத்தில் ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 சர்வதேச போட்டிகளில் ஆடவுள்ளது.
இதில் சிம்பாப்வேயுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொழும்பில் நடைபெற்ற நிலையில் ஆப்கானுக்கு எதிரான டி20 தொடர் தம்புள்ளையில் நடைபெறவுள்ளது.
இரு அணிகளும் ஆடும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொழும்பு, எஸ்.எஸ்.சி மைதானத்தில் பெப்ரவரி 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தெடர்ந்து இரு அணிகளும் ஆடும் ஒருநாள் போட்டிகள் பெப்ரவரி 9, 11 மற்றும் 14 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. அனைத்துப் போட்டிகளும் கொழும்பு, ஆர். பிரேமதாச அரங்கில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளன.
இதனையடுத்து பெப்ரவரி 17 ஆம் திகதி ஆரம்பமாகும் டி20 தொடரின் இரண்டு மற்றும் மூன்றாவது போட்டிகள் பெப்ரவரி 19 மற்றும் 21 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.