‘ஆதித்ய வர்மா’ | தினகரன்


‘ஆதித்ய வர்மா’

விக்ரம் மகன் துருவ்

ஆந்திராவில் அமோக வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற தெலுங்கு படம், ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் தமிழில் தயாராகி வருகிறது.  

நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் அறிமுகமாகிற படம் (ஆதித்ய வர்மா) திரைக்கு வருவதற்கு முன்பே நட்சத்திர அந்தஸ்தை பெற்று விட்டதாகவும் அவருக்கு என்று தனி அடையாளம் உருவாகி இருப்பதாகவும் படக்குழுவினர் கூறுகிறார்கள். படம் விரைவில் வெளியாகும் நிலையில் துருவ் விக்ரம் சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரை மாணவர்களும் மாணவிகளும் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் மத்தியில் கலகலப்பாக உரையாடிய துருவ் விக்ரம், ஒரு பாடலும் பாடி அசத்தினார். 

‘கோலமாவு கோகிலா’ படத்தில் இடம்பெற்ற “கல்யாண வயசுதான்” என்ற பாடலை அவர் பாட -மாணவ, மாணவிகள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக ‘ஆதித்ய வர்மா’ படத்தின் டீசர் திரையிடப்பட்டது. 

 


Add new comment

Or log in with...