எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படாது | தினகரன்


எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படாது

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய எரிபொருட்களின் விலைகளில் இன்றையதினம் மாற்றம் செய்யப்பட மாட்டாது என, நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 13ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என, நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருள் இறக்குமதிக்கமைய, உலக சந்தையில் எரிபொருட்களின் விலையின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும்  10 ஆம் திகதி விலைச்சூத்திரத்தின் படி, எரிபொருட்களின் விலைகள் நிதி அமைச்சினால் திருத்தம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...