மதீனா உம்மாவின் 'கனவு மகன்' | தினகரன்


மதீனா உம்மாவின் 'கனவு மகன்'

அக்கரைப்பற்றில் வெளியீட்டு விழா

அக்கரைப்பற்று எம்.ஐ.எப்.மதீனா உம்மா எழுதிய 'கனவு   மகன்' கவிதை நூல் அக்கரைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில்  வெளியிட்டு வைக்கப்பட்டது.   சம்மாந்துறை பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ.ஸ.அஹமட்   கியாஸ் தலைமையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், உதவிக்கல்விப் பணிப்பாளர் கலாநிதி எம்.ஐ.எம்.ஹனிபா நூல் அறிமுக   உரயையும் தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ்   நூல் நயவுரையையும் வழங்கினார்கள்.  

பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் தமதுரையில்: 

பிள்ளை வளர்ப்புத் தொடர்பில்  பல்வேறு முன்மாதிரிகளைக் கற்றுத் தரும் 'கனவு மகன்' நூல்   பெற்றோர்களினாலும், ஏனையவர்களினாலும் விரும்பி வாசிக்கத் தக்கதாக அமைந்துள்ளது.   அதன் தமிழ் மொழிநடை சிறப்பாக அமைந்துள்ளது.   தமிழ்மொழி பாடம் கற்கும் மாணவர்களுக்கு அல்லது தமிழ்   இலக்கியம் கற்பவர்களுக்கு சிபார்சு செய்யுமளவிற்கு இந்த நூல்   கனதியாகவும் தரம்மிக்கதாகவும் அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும். இவ்வாறு பெறுமதியான இலக்கியப் படைப்புக்கள் பெண் ஆளுமைகளினால் வெளிக்கொணரப்பட   வேண்டும் என்றார். 

விழாவுக்குத் தலைமைவகித்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ.ஸ.அஹமட் கியாஸ்: 

சமூகத்திற்குப் பயனுள்ள மொத்தம் ஒன்பது இலக்கியப்   படைப்புக்களை வெளிக்கொணர்ந்துள்ள மதீனா   உம்மா நீண்டகாலம் பேசப்படுவார். இதுபோன்ற மக்களின்   வாழ்வோடும் வாழ்வியலுடனும் பின்னிப் பிணைந்த இலக்கியங்களைப் படைக்கும்   சிறந்த ஆளுமைகள் சமூகத்தில் தோற்றம் பெறவேண்டும். இது காலத்தின்    அவசியமாகும். என்றார்.   விழாவில் உரையாற்றிய அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான்:   நூலாசிரியர் மதீனா உம்மாவின் 'கனவு மகன்' கவிதை நூல்   சிறந்த இலக்கியப் படைப்பாகவும் அறிவுப் பொக்கிஷமாகவும் மிளிர்கின்றது.   எங்களது மரணத்தின் பின்னரும் பாதுகாத்துப் பயன்பெறத்தக்க வகையில் சிறந்த   இலக்கியப் படைப்புக்களை சமூகத்திற்கு வழங்கும் அக்கரைப்பற்றின் பெண்   ஆளுமை மதீனா உம்மா பாராட்டப்பட வேண்டியவர்.   தாய், தந்தை, சமூக வலைத்தளங்கள் ஆகிய மூன்றுவகையான பெற்றார்களுக்கு    மத்தியில் பிள்ளைகளை வளர்க்க வேண்டிய சவாலை எதிர் கொண்டுள்ள தற்கால    குடும்பப் பெண்களுக்கு 'கனவு   மகன்' நல்லதொரு முன்மாதிரியாக விளங்குகின்றது.  

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ்   பேசுகையில், ஒரு நூல் படைப்பை வெளிக்கொணர முடியாது.  இலக்கியவாதிகள் அவஸ்தையுரும் இக் காலத்தில் இந்த நூலாசிரியர் ஒன்பது படைப்புக்களை வெளிக்கொணர்ந்து சமூகத்திற்கு பாரிய   பங்களிப்பு நல்கியுள்ளமை பாராட்டுக்குரியதாகும். 

இலக்கியவாதிகள் தங்களது இலக்கியப் படைப்புக்களினூடாக சமூகத்திற்குத் தேவையானவற்றை தைரியமாகச் சொல்ல வேண்டும். சமூகத்தை சரியான பாதையில் வழி  நடாத்த வேண்டும். அந்த சக்தி ஆக்க இலக்கியத்திற்கு மாத்திரமே உண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது. 

நூல் அறிமுக உரை வங்கிய உதவிக்கல்விப் பணிப்பாளர் கலாநிதி   எம்.ஐ.எம்.ஹனிபா பேசுகையில், இலக்கியப் படைப்பாளி மதீனா உம்மாவுக்கு   அறிமுகமொன்று தேவையில்லை எனுமளவிற்கு அவர் தனது திறமைமிக்க ஆக்கங்களினால்   சமூகத்தைக் கவர்ந்துள்ளார். அவரது படைப்புக்கள் எல்லோருக்கும். 

எக்காலத்திற்கும் பொருத்தமானதாகும். அவர் மேலும் பயனுள்ள நல்ல பல   வெளியீடுகளை தொடர்ந்தும் வெளிக்கொணர வேண்டும் என்றார்.

எல்.றிஸான்
(படங்கள்:அட்டாளைச்சேனை மத்திய நிருபர்) 


Add new comment

Or log in with...