Friday, March 29, 2024
Home » அதிபர் கொடுப்பனவு: விசேட குழுவின் பரிந்துரை கையளிப்பு

அதிபர் கொடுப்பனவு: விசேட குழுவின் பரிந்துரை கையளிப்பு

- ரூ. 6,000 கொடுப்பனவை ரூ.15,000 ஆக அதிகரிக்க பரிந்துரை

by Rizwan Segu Mohideen
January 26, 2024 7:54 am 0 comment

அதிபர் சேவையில் நிலவும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவால் நியமிக்கப்பட்டுள்ள குழு, அதன் அறிக்கையை நேற்று அமைச்சரிடம் கையளித்தது.

சம்பள திருத்தம் மற்றும் சம்பள முரண்பாடுகளை களைதல், அதிபர்களின் கொடுப்பனவை 6,000 ரூபாவிலிருந்து 15,000 ரூபாவாக அதிகரித்தல், அரசசேவை அதிகாரிகளுக்கு கிடைக்கும் தொடர்பாடல் பயணச் செலவு, வாகனம், வீடு உள்ளிட்ட கொடுப்பனவுகள் மற்றும் தூரப் பிரதேசங்களில் கடமையாற்றும் அதிபர்களுக்கான விசேட கொடுப்பனவு தொடர்பாக 6 முக்கிய விடயங்கள் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

தற்போது 16 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காணப்படும் அதிபர் சேவை தரம் III, II, I க்கு உட்பட்ட அதிபர்கள், பிரதி அதிபர்கள் மற்றும் உப அதிபர்கள், சேவைகளை பாடசாலை கட்டமைப்பின் புதிய தேவைகளை கவனத்திற்கொண்டு அதிபர்களுக்கான அதி உயர் தரத்தை உருவாக்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் பரிந்துரையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து, அதனூடாக சேவை யாப்பு திருத்தம் மூலம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், கல்வித்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT