வடமாகாணத்தை டிஜிட்டல் ரீதியாக வலுப்படுத்த மொபிட்டெல் நடவடிக்கை | தினகரன்


வடமாகாணத்தை டிஜிட்டல் ரீதியாக வலுப்படுத்த மொபிட்டெல் நடவடிக்கை

வடமாகாணத்தில் டிஜிட்டல் வீதி வரைபடத்தினை மொபிடெல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிமுக நிகழ்வு யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.  

ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மொபிடெல் தொலைத் தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சுடன் இணைந்து வடமாகாணத்துக்கான டிஜிட்டல் திட்ட வரைபினை அறிமுகம் செய்துள்ளனர். இந்த அறிமுக நிகழ்வானது வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் வடமாகாண ஆளுநரின் செயலாளர். யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் உட்பட அரச அதிகாரிகள் முன்னிலையில் அறிமுப்படுத்தப்பட்டது. 

வடமாகாணத்தினை டிஜிட்டல் ரீதியாக வலுப்படுத்தப்பட்ட மாகாணமாக மாற்றிடும் தேசிய குறிக்கோளினை அடையும் ஸ்ரீலங்கா டெலிகொமின் குழுமத்தின் முன்னேற்றத்தை இந்த திட்ட வரைபு வெளிப்படுத்தியுள்ளது. 

ஸ்ரீலங்கா டெலிகொமின் தேசிய டிஜிட்டல் திட்ட வரைபானது ஸ்மார்ட் பாதுகாப்பு, ஸ்மார்ட் அரசாங்கம், ஸ்மார்ட் சுகாதாரம், ஸ்மார்ட் கட்டடம், ஸ்மார்ட் பாவனைகள், ஸ்மார்ட் சூழல், ஸ்மார்ட் போக்குவரத்து மற்றும் அசையும் தன்மை, ஸ்மார்ட் விவசாயம், ஸ்மார்ட் கல்வி, ஸ்மார்ட் தொழிலாளர்கள் மற்றும் ஸ்மார்ட் உட்கட்டமைப்பு ஆகிய முக்கிய பிரிவுகளின் கீழ் செயற்படுத்த திட்டமிட்டுள்ள பெரியளவிலான ஐ.சி.ரி உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டமாகும். 

அரசாங்கத்தின் ஸ்மார்ட் முன்முயற்சிகளையும் மற்றும் கைத்தொழில் நிலவமைப்பினையும் வலுவூட்டுவதில் பாரிய கவனம் செலுத்துவது மட்டுமல்லாது ஒவ்வொரு துறையின் கீழும் முன்னெடுக்கப்படும் பெரிய அளவிலான திட்டங்கள் வழங்கிடும் இவ்வகையான நவீன டிஜிட்டல் தீர்வுகளானவை வடமாகாண மக்களின் வாழ்வை மாற்றியமைத்திடும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

இலங்கை மக்களின் வாழ்க்கையை பல வழிகளிலும் மாற்றிடும் ஓர் ஸ்மார்ட் தேசமாக இலங்கையை மாற்றிடும் அரசாங்கத்தின் குறிக்கோளுக்கு தலைமை பொறுப்பினை ஸ்ரீலங்கா ரெலிகொம் குழுமத்தினர் பங்கு வகிக்கின்றார்கள்.  

ஸ்ரீலங்கா டெலிகொம் குழுமம் 11மில்லியனுக்கு அதிகமான வாடிக்கையாளர் தளத்திற்கு தமது சேவையை வழங்குகின்றது என்பது விசேட அம்சமாகும். இதில் பல்தேசிய நிறுவனங்கள், பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள், பொதுத்துறை, சில்லறை மற்றும் உள்நாட்டு வாடிக்கையாளர்கள் எனப் பலரும் உள்ளடங்கலாக பல்வேறுபட்ட தெரிவுகளை கொண்ட ஐ.சி.ரி தீர்வுகள் மற்றும் வசதிகளையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

 


Add new comment

Or log in with...