பாத் பைண்டர் பணப்பரிமாற்ற சேவை கொழும்பில் அங்குரார்ப்பணம் | தினகரன்


பாத் பைண்டர் பணப்பரிமாற்ற சேவை கொழும்பில் அங்குரார்ப்பணம்

மெர்கன்டைல் மெர்ச்சன்ட் பேங்க் லிமிடெட் (MMBL) மற்றும் பாத் பைண்டர் குரூப் (Pathfinder) நிறுவனமும் இணைந்து பாத் பைண்டர் மணி எனும் பணப்பரிமாற்ற சேவை நிறுவனத்தை கொழும்பு அங்குரார்ப்பணம் செய்தன.  

இந்த பாத் பைண்டர் மணி நிறுவனமானது இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சர்வதேச பணப்பரிமாற்ற சேவை நிறுவனமாக அமைந்துள்ளது. இதன் கிளை நிறுவனங்கள் விரைவில் நாட்டில் முக்கியமான நகரங்களில் உள்ள பல பாகங்களிலும் திறந்து வைக்கப்பட உள்ளது. இந்த பாத் பைண்டர் மணி நிறுவனமானது அமெரிக்க டாலர் 5000வரையிலான பணத்தை வாங்கவும் விற்கவும் மத்திய வங்கியின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. விடுமுறை, சுற்றுலா, திருத்தல யாத்திரை, வர்த்தகம், தனிப்பட்ட ரீதியிலான பயிற்சி நெறிகள், விளையாட்டுத்துறை, கருத்தரங்குகள், கல்வி கற்றலுக்கான வதிவிட செலவீனங்கள் மருத்துவ வதிவிட செலவினங்கள் ஆகியவற்றிற்காக பணப் பரிமாற்றம் செய்யும் அங்கீகாரத்தை இந்நிறுவனத்திற்கு இலங்கை மத்திய வங்கி வழங்கியுள்ளது. 

MMBL- பாத் ஃபைண்டர் குரூப் நிறுவனத்தின் மற்றுமொரு பணப்பரிமாற்ற சேவையான MMBL Money Transfer ஏற்கனவே Aitken Spencers Private Limited நிறுவனத்துடன் இணைந்து பணப்பரிமாற்ற சேவையை நடத்தி வருகின்றது. இந்த MMBL Money Transfer இலங்கையில் மிகப் பிரம்மாண்டமான பாரியளவில் பணப் பரிமாற்ற சேவையை நடத்தி வரும் நிறுவனம் ஆகும்.   இது இலங்கையில் மூவாயிரத்துக்கும் அதிகமான கிளை நிறுவனங்களை கொண்டுள்ளது. இந் நிறுவனமானது வருடாந்தம் 150மில்லியன் அமெரிக்க டொலர்களை உள்ளக பணப்புழக்க நடவடிக்கையாக கொண்டுள்ளது. 

MMBL- Pathfinder குரூப் நிறுவனத்தின் தலைவர் திருமதி நீலியா பெரேரா இந்த புதிய நிறுவனத்தை வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.  

இந்த MMBL- Pathfinder குரூப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே. பாலசுந்தரம், பாத் பைண்டர்  குரூப் நிறுவனத்தின் தலைவர் திரு. பெர்னாட் குணதிலக்க, பாத் பைண்டர் agro அபிவிருத்தி இயக்குனர் திரு. தர்மின பெரேரா, நிறைவேற்று இயக்குனர் தினேஷ் மெண்டிஸ், MMBL பண பரிமாற்றச் சேவை நிறுவனத்தின் இயக்குனர் நிலாந்தி சிவப்பிரகாசம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.   

 


Add new comment

Or log in with...