அருள்மறை குர்ஆன் பற்றி.... | தினகரன்


அருள்மறை குர்ஆன் பற்றி....

குர்ஆன் என்னும் சொல் குர்ஆனில் எழுபது முறை கூறப்படுகிறது. “கரஅ” என்ற சொல்லிலிருந்து குர்ஆன் என்ற சொல் உருவானது. “கரஅ” என்ற சொல்லுக்கு ஓதுதல் என்று பொருள். ஆனால் கதாதா (ரலி) , அபு உபைதா (ரலி) ஒன்று சேர்த்தல் என்ற பொருள்படும் என்கின்றனர். “கரன” என்ற சொல்லிலிருந்து பிறந்தாகக் கூறுகின்றனர். அவர்களின் கூற்றுக்கு குர்ஆனின் 75-, 17ஆவது வசனம் ஆதாரம் என்கின்றனர். குர்ஆன் அல்லாஹ்வால் அருளப்பட்டது என்பதை “நாம் உங்கள் மீது ஓதியவை ஞான உபதேசங்கள்” என்ற குர்ஆனின் 3-; 58ஆவது வசனமும் “குர்ஆன் நாம் உங்கள் மீது இறக்கிய மிக்க பாக்கிம் உடைய ஒரு வேதம்” என்ற 6; -92ஆவது வசனமும் உறுதிப்படுத்துகின்றன.

அதனால் குர்ஆன் குறித்து குர்ஆன் கூறும் வசனங்கள் அல்லாஹ்வின் அருளுரை அகிலத்தில் வாழும் அனைவருக்கும் உரியது என்பதை குர்ஆன் உலகினர் அனைவருக்கும் உரியது என்பதை “குர்ஆன் உலகினர் அனைவருக்கும் நல்லுபதேசம்” என்று நவில்கின்றன. 6; -90, 81; -27ஆவது வசனங்கள். 

அரேபியாவில் தூதுத்துவம் பெற்ற முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதலில் அரேபிய மக்கள் குர்ஆனைத் தெளிவாக புரிந்து நடந்து பிறருக்கும் புரிய தெரிய வைத்து தெளிவாக தேர்ந்த நெறியில் ஒழுக நல்வழி காட்டுவதற்காகவே குர்ஆன் அரபி மொழியில் அருளப்பட்டது என்று கூறுகிறது குர்ஆனின் 43-; 3ஆவது வசனம். 

“இக்குர்ஆன் அல்லாஹ்வை அன்றி பொய்யாகக் கற்பனை செய்யப்பட்டது அல்ல. இக்குர்ஆன் முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தி விவரிக்கிறது. உலக மக்களைப் படைத்து காப்பவனிடமிருந்து வந்தது என்பதில் எள்ளளவும்  ஐயமில்லை” என்ற 10-; 37, “மிக்க புகழும் ஞானமும் உடையவனால் இறக்கப்பட்டது” என்ற 41-, 42, “நிச்சயமாக மிக்க ஞானமுடைய நன்க அறிந்தவன் இடமிருந்தே இந்தக் குர்ஆன் உங்களுக்குக் கொடுக்கப்பட்டது” என்ற 27; -6, “இவ்வேதத்தை மெய்யாகவே நாம் உங்கள் மீது இறக்கி வைக்கிறோம் என்பதற்கு அவர்களுக்கு ஓதி காண்பிக்கப்படும் இவ்வேதமே போதுமான சான்று. ஏனெனில் இதில் நம்பிக்கை உடையோருக்கு நிச்சயமாக அருளும் நல்ல உபதேசங்களும் இருக்கின்றன” என்ற 29-;51, “நாம் உங்களுக்கு வஹியின் மூலம் கொடுத்திருக்கும்” வேதம் முற்றிலும் உண்மையானது. 

அல்லாஹ் குர்ஆனில் எத்தகைய கோணலையும் வைக்கவில்லை” என்ற “இக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டாமா? இது அல்லாஹ்வையன்றி வேறொருவரிடமிருந்து வந்திருந்தால் இதில் பல முரண்பாடுகளைக் காண்பார்கள்” என்ற 4;8-2, :இதுதான் வேத நூல் இதில் ஐயமில்லை.  

படிப்பறிவு இல்லாத இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முந்திய வரலாறு வேதங்கள் பற்றி தெரியாது. அல்லாஹ் அறிவித்தது அன்றி வேறெதையும்  நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை என்பதை எதிர்வாதம் புரிந்தோர் உண்மையை உணர்வதற்காக குர்ஆனில் உறுதிப்படுத்தும் வசனங்கள் அருளப்பட்டன.

அல்லாஹ்வினால் அருளப்பட்ட கருத்துக்களைக் கூட்டவோ குறைக்கவோ முடியாது. ஆனால் சிந்திக்க சிந்திக்க சிறப்பாய் பொருள் உணரமுடியும். “அப்படி சிந்தித்து பொருளுணர்ந்தவர் உண்மையை உரைப்பார். குர்ஆன் கூறும் வழியில் வழிபாடு செய்வர் நேர் வழி பெறுவர். குர்ஆன் கூறும் முறையில் தீர்ப்புக் கூறுபவர் நீதி செலுத்துவார். குர்ஆன் வழியில் வாழ வகையாய் அழைப்போர் பகையறு பாங்கான நேர்வழி காட்டுவார்” என்ற​ நபி (ஸல்) அவர்களின் சீரிய மொழியை  சொல்கிறார்  அலி (ரலி) அவர்கள். நூல் மஸா பீஹு 

“குர்ஆன் கண்ணியமான வேதம்” என்ற குர்ஆனின் 41-; 41ஆவது வசனத்திற்கு இரு இறைமறை ஆய்வாளர்கள் அறிவிக்கும் விளக்கம், இமாம் குறைஷி (ரஹ்), “குர்ஆன் கண்ணியமானது. ஏனெனில் கண்ணியமான அல்லாஹ்விடமிருந்து  ஜிப்ரயீல் மூலம்   முஹம்மது நபி (ஸல்) அவர்களிடத்தில் அவர்களைப் பின்பற்றுவோருக்கு அருளப்பட்டது.’ இப்னு அத்தாவு. “குர்ஆன் கண்ணியமானது ஏனெனில் அதனை மிகைக்கும் அகமியம் எதுவும் இல்லை. குர்ஆனை அருளிய அல்லாஹ் மிகைத்தவன்” 

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அரேபியாவில் நிலவிய மது, மாது, சூது கொலை, கொள்ளை, கொடிய சிசு கொலை, குல சண்டை, குறி பார்த்தல், சூனியம் செய்தல் ஆகிய பாதக செயல்களைச் சாதகமான அழகிய சொற்களால் ஆதாரங்களோடு சாதாரண மனிதன் முதல் சகல நிலைகளிலும் உள்ளவர்களையும் உணர வைத்து திருத்தி பொருத்தமாய் ஒழுக்ககத்தோடு உலகில் உயர்வாய் வாழ வழி காட்டியது குர்ஆன்” என்று ​ெரவரன்ட் ஸ்டீபன்ஸ் கூறுகிறார். 

திருக்குர்ஆனின் அரபுமொழி அனைவராலும் அங்கீகரிக்கப்படுகிறது. அதன் இலக்கிய இலக்கண இயல்மொழி இசையினும் ஈர்க்கக் கூடியது. அதற்கு இணையான நீதி நூல் இல்லை. அதன் நல்லொழுக்க படிப்பினைகள் நீதியானவை. அது காட்டும் வழியில் நடப்பவன் நல்வாழ்வு வாழ முடியும்.

மொஹமட் நிலாம்


Add new comment

Or log in with...