யாழ். ஆணைக்கோட்டையில் திருட்டு | தினகரன்

யாழ். ஆணைக்கோட்டையில் திருட்டு

யாழ். ஆணைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 5பவுண் தங்கநகையும் 50,000ரூபா பணமும் திருட்டுப் போயுள்ளதாக, குறித்த வீட்டு உரிமையாளரினால், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆணைக்கோட்டை கூழாவடிக்கு அண்மையிலுள்ள  ஒழுங்கையில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இத்திருட்டு இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் எவரும் இல்லாத வேளையிலேயே இத்திருட்டு இடம்பெற்றுள்ளது. 

குறித்த வீட்டில் வசிப்பவர்கள் இன்று (20) பகல்  வெளியில் சென்றிருந்தபோது, வீட்டினுள் நுழைந்த திருடர்கள், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்கநகையையும் பணத்தையும்  திருடிச் சென்றுள்ளனர்.

மரண வீடொன்றுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய உரிமையாளர், தங்கநகையும் பணமும் திருட்டுப் போயுள்ளமையைக் கண்டு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

(மயூரப்பிரியன் -யாழ்.விசேட நிருபர்)


Add new comment

Or log in with...