16 வருடம் கோமாவுல இருந்தா இப்படித்தான் நடக்கும்! | தினகரன்


16 வருடம் கோமாவுல இருந்தா இப்படித்தான் நடக்கும்!

அடங்கமறு படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக விருக்கும் திரைப்படம் கோமாளி. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பிரதீம் ரங்கநாதன் இயக்கி இருக்கிறார். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்க் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்து படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்தப் படத்துக்காக ஜெயம் ரவி மிகுந்த உடல் எடையைக் குறைத்து பள்ளி மாணவனாக நடித்துள்ளார். ஏற்கனவே இந்தப் படத்தின் ஒலியும் ஒளியும் படப்பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.  ஜெயம் ரவி 16 வருடங்களாக கோமாவில் இருந்துவிட்டு 2016ஆம் வருடம் நினைவு திரும்புகிறார். அவருக்கு இடைப்பட்ட காலத்தில் நடந்த விஞ்ஞான வளர்ச்சிகள் எல்லாம் புதுசாக தெரிகிறது. இதனை மிகுந்த நகைச்சுவையோடு கூறியிருக்கிறார்கள். அதன்பிறகு கே.எஸ்.ரவிக்குமாருக்கும் அவருக்கும் இடையே நடக்கும் பிரச்சினையைப் பற்றிய கதையாக இருக்கும் என்று ட்ரைலயைப் பார்க்கும்போது தெரிகிறது. இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி சுதந்திர தினத்தன்று ரிலீஸாக விருக்கிறது.


Add new comment

Or log in with...