2 1/2 கிலோ தங்க நகை; பெண்கள் மூவர் உள்ளிட்ட நால்வர் கைது | தினகரன்

2 1/2 கிலோ தங்க நகை; பெண்கள் மூவர் உள்ளிட்ட நால்வர் கைது

2 1/2 கிலோ தங்க நகை; பெண்கள் மூவர் உள்ளிட்ட நால்வர் கைது-2-5kg Gold Jewellery Worth Rs 1-4 Crore 4 Arrested

ரூ. ஒரு கோடி 40 இலட்சம் பெறுமதி

சுமார் இரண்டடை கிலோ தங்க நகைகளுடன் மும்பாயிலிருந்து வந்த 3 பெண்கள் உள்ளிட்ட நால்வர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 1/2 கிலோ தங்க நகை; பெண்கள் மூவர் உள்ளிட்ட நால்வர் கைது-2-5kg Gold Jewellery Worth Rs 1-4 Crore 4 Arrested

நேற்று (22) இரவு 8.00 மணியளவில், 9W252 எனும் மும்பாயிலிருந்து வந்த விமானம் மூலம் கட்டுநாயக்கா விமான நிலையம் வந்தடைந்த குறித்த நால்வருமே சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளரும் அதன் பேச்சாளருமான சுனில் ஜயரட்ண தெரிவித்தார்.

2 1/2 கிலோ தங்க நகை; பெண்கள் மூவர் உள்ளிட்ட நால்வர் கைது-2-5kg Gold Jewellery Worth Rs 1-4 Crore 4 Arrested

கொழும்பைச் சேர்ந்த சந்தேகநபர்கள், 2.5403 கிராம் தங்க நகைகளை இவ்வாறு சட்டவிரோதமாக கடத்தி வந்துள்ளனர்.

குறித்த நகைகளின் பெறுமதி ரூபா ஒரு கோடியே 40 இலட்சத்திற்கும் அதிகம் (ரூ. 14,099,570) என கணக்கிடப்பட்டுள்ளதாக சுனில் ஜயரட்ண தெரிவித்தார்.

Add new comment

Or log in with...