சைனீஸ் ட்ராகன் கஃபேயின் இலவச விநியோக சேவை ஆரம்பம் | தினகரன்


சைனீஸ் ட்ராகன் கஃபேயின் இலவச விநியோக சேவை ஆரம்பம்

முன்னணி சைனீஸ் உணவகங்களில் ஒன்றான சைனீஸ் ட்ராகன் கஃபே பிரைவட் லிமிட்டெட், தனது விசுவாசமான வாடிக்கையாளர்களை கௌரவிக்கும் முகமாக விசேட திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. சகல முறைகளிலும் ஏற்கனவே மேற்கொண்ட ஓடர் திகதியிலிருந்து 30 நாட்கள் இடைப்பட்ட காலப்பகுதியில் மீள் கொள்வனவு மேற்கொள்ளும் போது அதில் 10மூ விலைக்கழிவை பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது.  

பம்பலப்பிட்டி, இரத்மலானை, ராஜகிரிய, கொழும்பு கோட்டை, வத்தளை, பெலவத்தை, நாவல மற்றும் நுகேகொட ஆகிய எட்டு விற்பனை நிலையங்களிலிருந்த தனது விநியோக சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்கவும் முன்வந்துள்ளது. 

வாடிக்கையாளர்களுக்கு தமது ஓடர்களை பதிவு செய்வதற்கும் கருத்துக்களை வழங்குவதற்கும் பல வழிமுறைகளை சைனீஸ் ட்ராகன் கஃபே கொண்டுள்ளது. 

சைனீஸ் ட்ராகன் கஃபே முகாமைத்துவ பணிப்பாளர் என்.கே.உதேஷி கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் முன்னணி சீன உணவகம் எனும் வகையில், நாம் 76 வருட காலமாக எமது செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறோம். “நினைவிருக்கும் உணவு வேளை” எனும் தொனிப்பொருளில் அசல் சீன உணவுகளை நாம் தயாரித்து வழங்குவதுடன், எம்முடன் தொடர்ந்து பயணிக்கும் வாடிக்கையாளர்களை நாம் கொண்டுள்ளோம். இலவச உணவு விநியோக சேவையை நாம் அறிமுகம் செய்துள்ளதுடன், 10 சதவீத விலைக்கழிவு திட்டத்தையும் எமது விசுவாசமான வாடிக்கையாளர்களுக்காக வழங்குகின்றோம்.” என்றார்.     


Add new comment

Or log in with...