குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்; கொமர்ஷல் வங்கி விசேட திட்டம் | தினகரன்


குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்; கொமர்ஷல் வங்கி விசேட திட்டம்

கொமர்ஷல் வங்கியின் வீட்டுக் கடன்களுக்கு விரைவான கடன் கோரிக்கை ஏற்புடன் கூடிய குறைந்த வட்டி, தெரிவுசெய்யப்பட்ட கட்டிடப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது விலைக்கழிவுகள் ஆகியவற்றை மட்டுப்படுத்தப்பட்ட காலத்துக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. 

கொமர்ஷல் வங்கியின் 'வீட்டுக் கடன் கொண்டாட்டம்' மீளவும் திரும்புவதன் மூலமாக, வெறுமனே 13 சதவீதம் என்ற குறைவான வட்டி வீதத்திலிருந்து ஆரம்பிக்கும் வகையிலான கடன்களைப் பெற முடியுமென்பதோடு, தெரிவுசெய்யப்பட்ட கட்டடப் பொருட்களை 35 சதவீதம் வரையிலான கழிவு விலையில் பெற்றுக்கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் செயற்பாடு இவ்வாண்டு செப்டெம்பர் இறுதி வரை செயற்பாட்டில் இருக்கும். இதில், 'ஸ்பீட் ஹோம் லோன்ஸ்' என்ற திட்டத்தின் அடிப்படையில், தேவையான அனைத்து ஆவணங்களும் கிடைக்கப்பெற்று மூன்று வேலை நாட்களுக்குள் கடன் அங்கீகரிக்கப்படுவதோடு, கடன் பணமானது, கடனைக் கோரியவரை 14 நாட்களுக்குள் சென்றடையுமென வங்கி தெரிவித்தது.  

விலைக்கழிவுத் திட்டமானது கடனைப் பெறுபவர்கள் வீட்டு நிர்மாணத்துக்கான பொருட்களான வீட்டுக் கூரைகள், சீமெந்து, வண்ணப்பூச்சு, நிலப் பதிகல் (டைல்), சுவர்ப் பதிகல், அதனோடு சம்பந்தப்பட்ட பொருட்கள், மின்னியல் கருவிகள், மரப் பாதுகாப்புப் பொருட்கள், குளியலறைப் பொருத்துகளும் கருவிகளும், பி.வி.பி குழாய்களும் பொருத்துகளும், இரும்புப் பொருட்கள் ஆகியவற்றுக்கான விலைக்கழிவுகளைப் பெற முடியும். 

மேலதிகமாக, 'வீட்டுக் கடன் கொண்டாட்டம் திட்டத்தின் ஓர் அங்கமாக, எதிர்பார்க்கப்படும் வருமானம், ஓய்வுகாலச் சலுகைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மீளச் செலுத்துவதற்கான வாய்ப்புகளையும் வங்கி வழங்குகிறது.     


Add new comment

Or log in with...