‘ஜுவலரி வைட்’ நிறத்தில் OPPO F11 அறிமுகம் | தினகரன்


‘ஜுவலரி வைட்’ நிறத்தில் OPPO F11 அறிமுகம்

உலகின் முன்னணி ஸ்மார்ட் போன் வர்த்தக நாமமான OPPO இவ்வருடம் மார்ச் மாதம் அறிமுகப்படுத்திய OPPO F11ற்கு ‘ஜுவலரி வைட்’ நிறத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

F11 ஸ்மார்ட் போனின் மூன்றாவது நிறமா ‘ஜுவலரி வைட்’ அமைந்துள்ளது. இதற்கு முன்னர் மார்பில் கிறீன் மற்றும் ப்ரோரைட் பேர்பிள் ஆகிய நிறங்களில் கிடைக்கப்பெற்றது. OPPO வர்த்தக நாமத்தின் முன்னைய மாதிரிகள் வாடிக்கையாளர்களால் விரும்பப்பட்டது போன்று மூன்றாவதுநிறத் தெரிவும் விரும்பப்படும் என நம்புவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.  செயற்பாட்டுரீதியாக, இது ஏனைய மாறுபாடுகளுடன் குறிப்பாக புதிய நிறத்துக்கேற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  

“வாடிக்கையாளர்களின் தேவை, அவர்களின் விருப்பம் மற்றும் அவர்களால் வழங்கப்படும் பின்னூட்டத்துக்கு மதிப்பளித்தல் போன்றவற்றுக்கு முன்னுரிமையளிக்கும் உலக வர்த்தகநாமமாக விளங்குகிறது. நிறம் ஒருவருடைய அணுகுமுறை மற்றும் ஆளுமை என்பவற்றை பறைசாற்றும். OPPO F11 இன் புதிய நிறத் தெரிவான இலங்கை சந்தையில் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் என்றும், எப்பொழுதும்போல அவர்களால் விரும்பப்படும் என்றும் உறுதியாக நம்புகின்றோம்” என OPPO லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொப் லீ தெரிவித்தார்.     


Add new comment

Or log in with...