அனைத்து வலையமைப்புகளும் Huawei உடன் | தினகரன்


அனைத்து வலையமைப்புகளும் Huawei உடன்

அனைத்து வலையமைப்புகளும் Huawei உடன்-All Networks are with Huawei -Harin Fernando

இலங்கையின் அனைத்து தொலைத்தொடர்பாடல் வலையமைப்புகளும் Huawei உடன் இருப்பதாக தெரிவித்த தொலைத்தொடர்பாடல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், ஹரின் பெனாண்டோ, அந்நிறுவனம் துறைக்கு பங்களிப்பு செய்துள்ளதுடன், அதன் தொழில்நுட்பத்தை  பயன்படுத்துகின்றமையானது, இலங்கையில் பிரசன்னம் இல்லாத ஒன்றை பயன்படுத்துவதை விட சிறந்ததென குறிப்பிட்டுள்ளார்.

"இலங்கைக்கு உண்மையிலேயே சீனர்கள் உதவி மற்றும் ஆதரவு அளித்துள்ளனர். முழு முதுகெலும்பும், அனைத்து வலையமைப்புகளும் சீன நிறுவனங்களிடம்தான் உள்ளன. எனவே அவர்களின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, இலங்கையில் இல்லாத ஒருவரைக் கொண்டிருப்பதைக் காட்டிலும் எங்களுக்கு அர்த்தமுள்ளது" என சமீபத்தில் சீனாவின் ஷங்காயில் நடைபெற்ற Mobile World Congress (MWC) 2019 நிகழ்வின் போது, to China Global Television Network (CGTN) இற்கு கருத்து தெரிவிக்கும் போது ஹரின் பெனாண்டோ மேலும் தெரிவித்தார்.

CGTN இன் படி, Huawei இன் உபகரணங்கள் பல வளர்ந்து வரும் நாடுகளில் குறிப்பிடத்தக்களவில் காணப்படுகின்றன.

Huawei Wireless இன் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி பெங் ஹொங்குவாவின் கருத்தின் படி, நிறுவனமானது ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தல் நடவடிக்கைகளுக்காக 4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக செலவிட்டுள்ளது. இதுதவிர, 3GPP க்கு 18,000 க்கும் அதிகமான பங்களிப்புகளை வழங்கியுள்ளதுடன், உலகளாவிய ரீதியில் சுமார் 20% அத்தியாவசிய காப்புரிமைகளைக் கொண்டுள்ளது."

‘5G is on!’ என்ற கருப்பொருளில் அமைந்ததுடன், 2019 Mobile World Conference ஷங்காய் இல் அனைத்து இடங்களிலும் இந்தத் தொழில்நுட்பமே உள்ளதுடன், தொலைக்கட்டுப்பாட்டுக் கருவி மூலம் இயக்கக்கூடிய அகழ்வு இயந்திரம் முதல் ரோபோக்கள் வரை இதன் மூலம் பயன்படுத்தக்கூடியன காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

MWC ஷங்காய் 2019 நிகழ்வானது அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களான- 5G, IoT, AI, big data மற்றும் அதற்கு அப்பாலானவற்றிற்கான ஆசியாவின் முன்னணி நிகழ்வாகும். MWC ஷங்காயின், இந்த மாநாட்டில் தொழில்நுட்பத் துறையின் மிகவும் செல்வாக்குமிக்க சில நிர்வாகிகளின் சிந்தனையைத் தூண்டும் விளக்கக்காட்சிகள் இடம்பெற்றதுடன், அவர்கள் நிகழ்கால மற்றும் எதிர்கால போக்குகள் தொடர்பான அத்தியாவசிய உள்நோக்கினை வழங்கிய அதேவேளை, மொபைல் துறையைப் பற்றிய தூரநோக்கு சிந்தனைகளையும் பகிர்ந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...