பதில் அமைச்சர்கள் மூவர் பதவிப்பிரமாணம் | தினகரன்


பதில் அமைச்சர்கள் மூவர் பதவிப்பிரமாணம்

பதில் அமைச்சர்கள் மூவர் பதவிப்பிரமாணம்-3 Acting Ministers Sworn

பதில் அமைச்சர்கள் மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

கடந்த வாரம் முஸ்லிம் அமைச்சர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்தததையடுத்து இன்று (10) குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய முன்னாள் அமைச்சர்களான, ரிஷாட் பதியுதீன், ரஊப் ஹகீம், கபீர் ஹஷீம் ஆகிய அமைச்சர்கள் வகித்த அமைச்சுகள், கைத்தொழில், வர்த்தக பிரதியமைச்சர் புத்திக பத்திரண, நகர திட்டமிடல், பெற்றோலிய வள அபிவிருத்தி பிரதியமைச்சர் அனோமா கமகே, நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதில் அமைச்சர்கள் மூவர் பதவிப்பிரமாணம்-3 Acting Ministers Sworn

கைத்தொழில், வர்த்தக பிரதியமைச்சர் புத்திக பத்திரண :
கைத்தொழில், வர்த்தகம், நீண்டகாலமாக இடம்பெயர்ந்துள்ளவர்களை மீளக்குடியமர்த்துதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி பதில் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். (முன்னர் ரிஷாட் பதியுதீன் எம்.பி.)

பதில் அமைச்சர்கள் மூவர் பதவிப்பிரமாணம்-3 Acting Ministers Sworn

நகர திட்டமிடல், நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன :
நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி பதில் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். (முன்னர் ரஊப் ஹக்கீம் எம்.பி.)

பதில் அமைச்சர்கள் மூவர் பதவிப்பிரமாணம்-3 Acting Ministers Sworn

பெற்றோலிய வள அபிவிருத்தி பிரதியமைச்சர் அனோமா கமகே:
பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி பெற்றோலிய வள பதில் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். (முன்னர் கபீர் ஹஷீம் எம்.பி.)


Add new comment

Or log in with...