இம்மாத இறுதிக்குள் ஜ.தே.மு. நிறுவப்படும் | தினகரன்


இம்மாத இறுதிக்குள் ஜ.தே.மு. நிறுவப்படும்

இம்மாத இறுதிக்குள் ஐ.தே.க. புதிய கூட்டமைப்பு -Democratic National Front Will Formed End of August-PM Ranil

இம்மாத இறுதிக்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய கூட்டணியான ஜனநாயக தேசிய முன்னணியை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், அனைத்து கட்சிகள் மற்றும் குழுக்களுடனும் கலந்தாலோசித்து, அதற்கமைய ஜனநாயக ரீதியில் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாட்டைப் பாதுகாத்தல் மற்றும் நாட்டைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட, அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் ஜனநாயக தேசிய முன்னணி தொடர்பில் ஆழமான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய கூட்டணியில், தேசிய கொள்கைகளின் அடிப்படையில் எதிர்கால திட்டங்கள் தயாரிக்கப்படும் என பிரதமர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்குவது தொடர்பிலான ஆவணங்களை இறுதிசெய்து இம்மாத இறுதிக்குள் ஜனநாயக தேசிய முன்னணியை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...