அதிகாரத்தின் குரலாகும் பிரதி வெட்டுக்கிளிகளை உற்றுக் கேட்டல் | தினகரன்


அதிகாரத்தின் குரலாகும் பிரதி வெட்டுக்கிளிகளை உற்றுக் கேட்டல்

எமது எழுத்துக்களின் ஊடாக எமது கலாசாரக் கூறுகளை அவர்கள் அறிந்து கொள்வதற்கான அனைத்து வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். இதுவே இன்றைய உலக அதிகாரத்தின் பெருத்த கூறான, கருத்துப் பறிமாற்றல் எனும் விரிந்த பரப்பாகும். இவற்றினை சாத்தியப்படுத்தக் கூடிய செயற்பாடுதான் சமூகக் கட்டமைப்பு சார்ந்த கட்டுரைகளின் கருத்தியல் கோட்பாடாகும்.  

சமூகவியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பாக அருந்ததி ரோயின் வெட்டுக்கிளிகளை உற்றுக் கேட்டல் கிளர்ச்சியின் மீது நிகழ்த்தப்படுகின்ற அடையாள அரசியலின் பிரதிபலிப்பாகும். அதிகார வர்க்கத்தின் மேலாதிக்க கண்ணோட்டத்திலிருந்து பிரிந்து செல்கின்ற காத்திரமான கட்டுரைகளை இத் தொகுதியில் தரிசிக்க முடியும். அருந்ததி ரோயின் ஜனநாயகம் பற்றிய மாற்றுப் பார்வையினை விரிவாகக் கதையாடும் இப்பிரதியில் அவர் இப்படிச் சொல்லுவார்.இறப்பின் பின் வாழ்வுண்டா என்று நாம் விவாதிக்கும் அதே வேளையில், இன்னொரு விஷயத்தையும் நாம் விவாதிக்கலாமா? ஜனநாயகத்தின் பின் வாழ்வுண்டா? அது எத்தகைய வாழ்வாக இருக்கும்? ஜனநாயகம் என்னும் போது, அதை இனிமேல் நாம் அடைய விரும்பும் குறிக்கோள் அல்லது நனவாக்கவிரும்பும் கனவு என்னும் பொருளில் இங்கு நான் எடுத்தாளவில்லை. தற்போது நிலவிவரும் ஜனநாயக வடிவத்தையே, மேல்நாட்டுத் தாராளமய ஜனநாயகத்தையே, அதன் மாற்று வடிவங்களையே இங்கு நான் கருதுகிறேன். இத்தகைய ஜனநாயகத்தின் பின் வாழ்வுண்டா அதிகார வர்க்கத்தினைப் பார்த்து கேள்வி கேட்கின்ற உரிமைப் போக்கினை இவ்வகையான முறைமைகளில் நாம் கண்டு கொள்ளலாம்.  

இன்று பெரும் விவாதக் கருப் பொருளினையும், அதிகார அடையாளங்களையும் பிரதிபலிக்கின்ற பெண்ணிய கருத்தியல் போக்கானது பெண் உரிமைகள், அவர்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள், அதிகார இருப்பியலின் வங்குரோத்தில் இடம்பெற்றன. இதனால் பெண்மை சார்ந்த உரையாடல்கள் உலகளாவிய ரீதியில் வேகமாகப் பரவி தன்னுடைய அடையாளப் பரப்பினை விஸ்தரித்திருக்கிறது எனலாம். அதிகார செயற்பாடுகள் பெண்களுக்கான உரிமைகளை தக்க நேரங்களில் வழங்காமல் அவர்களின் தனித்துவமான கடமைகளுக்கு முட்டுக் கட்டையாக செயற்படுகின்ற நிலையினை ஏற்படுத்தியிருக்கின்றன. வீடுகளில் தொட்டு வேலை செய்கின்ற காரியாலயங்கள் வரை பெண்களின் சுதந்திர செயற்பாட்டில் தடைகள் அதிகரித்த நிலையே காணப்படுகின்றன. இவ்வாறான வாழ்வியலை கருத்தில் கொண்ட பல பெண்கள் உற்சாகமாக எழுந்து தங்களுக்கான அமைப்புக்களை உருவாக்கிக் கொண்டனர். இவ் அமைப்புக்கள் கிராமங்கள் தொட்டு முழு உலகிலும் தன்னுடைய செல்வாக்கினை செலுத்தியிருக்கின்றன. அவ்வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அருந்ததி ரோயின் இத் தொகுதி அதிகார மையத்தின் மீது எறியப்படுகின்ற மிகப் பெரும் அணுவாகும்...     


Add new comment

Or log in with...