மேலைத்தேய கலாசாரங்களின் ஊடுருவலால் தமிழ் கலாசார விழுமியம் தனித்துவம் இழக்கிறது | தினகரன்


மேலைத்தேய கலாசாரங்களின் ஊடுருவலால் தமிழ் கலாசார விழுமியம் தனித்துவம் இழக்கிறது

தமிழ்க்கலைஞர்களின் சங்கமம் அங்குரார்ப்பண நிகழ்வில் அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன்

இந்துகலாசாரத்திணைக்களம் நடாத்தும் அம்பாறை மாவட்ட 'தமிழ்க்கலைஞர்களின் சங்கமம்' முன்னோடிநிகழ்வு அண்மையில் காரைதீவு சுவாமி விபுலாநந்த மணிமண்டபத்தில் நடைபெற்றது.இந்து கலாசாரத் திணைக்களஉதவிப்பணிப்பாளர் திருமதி ஹேமலோஜினி குமரன் தலைமையில் நடைபெற்றஇந் நிகழ்வில் பிரதமஅதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்கஅதிபர்வே.ஜெகதீசன் கலந்துசிறப்பித்தார்.

சுவாமி விபுலாந்நத அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்துஅவர் பிறந்தவீட்டில் விசேடபூஜை நிகழ்த்தப்பட்டு மணிமண்டபத்தில்நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

கலைகள் மனிதசமுதாயத்தின்காலக்கண்ணாடி. மனிதன் தோன்றிய காலத்திலிருந்து கலைகளும்தோற்றம்பெற்றன. அன்று மிகவும் சிறப்பாகவிருந்த கலைகள் இன்றுநவீன தொழினுட்பவளர்ச்சி காரணமாக பெரும் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளன'என்று நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்கஅதிபர் வே.ஜெகதீசன் தெரிவித்தார்.அவர் மேலும் உரையாற்றுகையில்:பல்லின சமூகங்கள் வாழும் நாட்டில் நாம்ஏனைய சமூகங்களின் கலை, பண்பாட்டு, பாரம்பரியங்களை மதிக்கின்ற அதேவேளை எமதுபாரம்பரிய கலைகளை திரிபுபடாது பேணிப்பாதுகாக்கவேண்டிய கடப்பாடுஎமக்குள்ளது.

 கலையின் இன்றைய போக்கைசீர்தூக்கிப்பார்த்தால் உலகமயமாதல் இதற்கு பெரும் சவாலாகவுள்ளது. மேலைத்தேயகலாசாரங்கள் இலகுவாக எமது கலைகளுள் ஊடுருவி எமது கலைகலாசாரவிழுமியங்களின் தனித்துவத்தை இழக்கச் செய்கின்றன. தமிழ்மொழி மற்றும் தமிழ்க் கலைகள் பல்வேறு சவால்களைத் தாண்டி வளர்ந்து கொண்டிருக்கிறன.புலம்பெயர்மக்களும் அவற்றைப் பேணி வளர்க்கிறார்கள். சிலர் அவற்றை மறந்து ஏனைய கலாசாரத்தோடு சங்கமிக்கிறார்கள். பாடசாலைகள்மற்றும் ஆலயங்கள் தமிழ்மொழிப் பிரயோகத்தையும் கலைகளையும் வளர்க்கின்றகளங்களாக மாற்றவேண்டும். ஆலயங்களில் வழமையான கிரியைகளுடன் ஒருநாள் கலைவிழாவும்நடாத்தப்படவேண்டும். பலஆலயங்களில் வாய்ப்பாட்டிற்குப்பதிலாக இறுவெட்டைஇசைக்க விடுகிறார்கள். மணிக்குப்பதிலாக இசைக்கருவிகள் ஒலிக்கின்றன. இசைக்கச்சேரிகளில் பழம்பெரும் வாத்தியஇசைக்கருவிகள் தற்போதுபயன்படுத்தப்படுவதில்லை.கரொக்கி என்ற இசைத்தொகுப்பிற்கு வாயசைப்பது அல்லதுபாடுவது வழமையாகிவிட்டது. இந்த நிலையில் கலை வளர்வதெப்படி?

இளம் சமுதாயத்தினர் கலைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து தொடுதிரைகளில் காலத்தைப் போக்குகின்றார்கள்.கலைகளால் இறைவனை வழிபடலாம்.

அம்பாறை மாவட்டத்தில் 199தமிழ்க்கலைஞர்கள்பதிவுசெய்யப்பட்டுள்ளனர். 12கலா மன்றங்கள் பதிவுசெய்யப் பட்டுள்ளன.கலைகளை வளர்ப்பதில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.சிறப்பதிதியான காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் ரையாற்றுகையில், கலைஞர்கள்கலையை வளர்க்கப் போராடும் துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளன. அதனால் கலைகள்அழிந்துவரும் பேராபத்தை எதிர்நோக்கியுள்ளன. இங்கு முத்தமிழ்நித்தமும் நர்த்தனமாடவேண்டும் என அன்று கண்டகனவு இன்று ஓரளவு நனவாகிவருவதுகண்டு மகிழ்ச்சியடையலாம் என்றார்.

அம்பாறைமாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 300தமிழ்க் கலைஞர்கள் நிகழ்வில்கலந்துகொண்டனர்.அவர்களுடனான சந்திப்பை சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.இன்பமோகன்நெறிப்படுத்தினார்.

கலை நிகழ்ச்சிகளும் மேடையேறின.

 

வீ.சகாதேவராஜா...

படங்கள்: காரைதீவு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...