Friday, March 29, 2024
Home » லீசிங் விளம்பரத்தை அறிமுகப்படுத்தும் கொமர்ஷல் வங்கி மற்றும் DIMO
வர்த்தக வாகனங்கள்,விவசாய இயந்திரங்களுக்கான

லீசிங் விளம்பரத்தை அறிமுகப்படுத்தும் கொமர்ஷல் வங்கி மற்றும் DIMO

by Gayan Abeykoon
January 24, 2024 8:33 am 0 comment

DIMO இலிருந்து வணிக வாகனங்கள் மற்றும் விவசாய இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கான லீசிங் வசதிகளைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் இதர நன்மைகளை வழங்குவதற்கு கொமர்ஷல் வங்கி மற்றும் DIMO ஆகியன மீண்டும் ஒன்றிணைந்துள்ளன.

இந்த விளம்பரமானது பிரபலமான TATA Ace HT2 உள்ளடக்கியது, இது வர்த்தக வாகனப் பிரிவில் உள்ளூரில் ‘ DIMO பட்டா” என்று பரவலாக அறியப்படுகிறது. மஹிந்திரா மற்றும் ஸ்வராஜ் பிராண்டுகளின் டிராக்டர்கள் மற்றும் LOVOL விவசாய இயந்திரங்கள் பிரிவில் அறுவடை இயந்திரங்களை இணைக்கின்றன.

TATA Ace HT2 இன் சிறப்புச் சலுகைகள், ஜூன் 30, 2024 வரை செல்லுபடியாகும், ரூ. 600,000 பொதுத் தள்ளுபடி மற்றும் DIMO இன் இலவச RMV பதிவு தவிர ரூ. 15,000 பிரத்யேக தள்ளுபடியும் வழங்கப்படும். அதேபோன்று லீசிங் வசதிகளுக்கான நிலையான வட்டி விகிதத்தில் 1% குறைப்பு வசதியும் கொமர்ஷல் வங்கியால் வழங்கப்படும்.

இந்த விசேட லீசிங் வசதியின் கீழ் DIMO ஆனது நான்கு வருட விரிவான உத்தரவாதத்தையும், மஹிந்திரா மற்றும் ஸ்வராஜ் டிராக்டர்களில் இரண்டு வருடங்களுக்கு இலவச ஆயில் ஃபில்டர்களையும், 2023 டிசம்பர் 1 முதல் 2024 நவம்பர் 30 வரை லீசிங் வசதிக்கு எடுக்கப்பட்ட LOVOL அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு வருட விரிவான உத்தரவாதத்தையும் வழங்கும். வணிக வாகனப் பிரிவு மற்றும் விவசாய இயந்திரங்களை உள்ளடக்கிய கொமர்ஷல் வங்கி, இந்தக் கூட்டாண்மையின் கீழ் லீசிங் வசதிக்கான நிலையான வீதத்தை விட 0.5மூ குறைவான வட்டி வீதத்தை வழங்கும்.

கூடுதலாக, கொமர்ஷல் வங்கியின் பிரபலமான ‘கண்ணவாரிக’ (பருவகால கொடுப்பனவுகள்) லீசிங் வழங்க விவசாயிகளின் வருமான முறைகளுக்கு ஏற்ப தொகுப்புகள், அறுவடைக் காலங்களில் மட்டுமே வாடகைக்கு வழங்கப்படும், டிராக்டர்கள் மற்றும் அறுவடை இயந்திரங்களின் குத்தகைகளுக்குப் பொருந்தும்.

இலங்கையின் முதல் 100% கார்பன் பாவனையினை குறைத்த வங்கி, உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட வங்கி, கொமர்ஷல் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி வலையமைப்பினைக் கொண்ட 271 கிளைகள் மற்றும் 964 தானியங்கி இயந்திரங்களை கொண்டு இயங்குகின்றது. கொமர்ஷல் வங்கி இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறைக்கு பாரிய கடனுதவி வழங்குவதோடு நாட்டின் வங்கித் துறையில் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பங்களாதேஷை உள்ளடக்கியது, அங்கு வங்கி 20 கிளைகளை இயக்குகின்றது: மியன்மார் நய் பியி தாவில் நுண்நிதி நிறுவனத்தினை கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT