Saturday, April 20, 2024
Home » பிரத்தியேகமான வங்கியியலில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் யூனியன் வங்கி Elite Circle

பிரத்தியேகமான வங்கியியலில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் யூனியன் வங்கி Elite Circle

by Gayan Abeykoon
January 24, 2024 7:00 am 0 comment

வாடிக்கையாளர்களின் பிரத்தியேகமான தேவைகளுக்கு பொருந்தும் வகையில் புதிய அம்சங்களுடன் “யூனியன் வங்கி Elite Circle” தீர்வை யூனியன் வங்கி அண்மையில் மீள அறிமுகம் செய்துள்ளது. இந்த மெருகேற்றத்துடனான மீள அறிமுகத்தினூடாக வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான வங்கியியல் அனுபவத்துக்கான சொகுசையும், வெகுமதிகளுடான அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மேம்படுத்தப்பட்ட தீர்வு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “வாழ்க்கையின் சிறந்த அம்சங்கள், உங்களின் வங்கிக் கொடுக்கல் வாங்கல்களிலும் தொடர வேண்டும்” எனும் தொனிப் பொருளில் ஊக்குவிப்புத் திட்டமொன்றை வங்கி அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.

வங்கியின் பிரத்தியேகமான உறவு பேண் முகாமையாளர்களினூடாக, பிரத்தியேகமான வங்கியியல் மற்றும் சொத்து முகாமைத்துவம் முதல் நிபுணத்துவ ஆலோசனைகள் வரை பரந்தளவு நிதித் தீர்வுகள் மற்றும் சேவைகள் வழங்கப்படுவதுடன், பிரத்தியேகமான சேவையின் அடையாளங்கள் மீள உறுதி செய்யப்படுகின்றன.

கொழும்பின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள பிரத்தியேகமான யூனியன் வங்கி Elite Circle சென்ரரினூடாகவும், கிளைகளில் காணப்படும் பிரத்தியேகமான பகுதிகளினூடாக அங்கத்தவர்களுக்கு அதியுயர் சௌகரியம் ஏற்படுத்தப்படுகின்றமை உறுதி செய்யப்படுகின்றது.

விற்பனை வங்கியியல் பிரிவின் சிரேஷ்ட உப தலைவர் சாயா ஜயவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் வங்கியின் Elite Circle என்பது, பிரத்தியேகமான வாடிக்கையாளர்களின் பரந்தளவு தேவைகளை இலகுவாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட விசேடமான வங்கியியல் தீர்வாகும்.

புதிதாக மேம்படுத்தப்பட்ட யூனியன் வங்கி Elite Circle இனூடாக, சேவை மட்டங்களை மேம்படுத்துவதில் வங்கியின் நோக்கம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர் உறவு பேண் முகாமைத்துவத்தில் அதிகளவு அக்கறை செலுத்தி, பிரத்தியேகமான வங்கியியல் அனுபவத்தை மாற்றியமைப்பதிலும், மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய நிதித் தீர்வுகளை வழங்குவதிலும் புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT