உங்கள் சவாரியைச் சரிபார்க்க Uber உடன் மூன்று படிமுறைகள் | தினகரன்


உங்கள் சவாரியைச் சரிபார்க்க Uber உடன் மூன்று படிமுறைகள்

உங்கள் சவாரியைச் சரிபார்க்க Uber உடன் மூன்று படிமுறைகள்-Three steps to Check Your Ride with Uber

அவசியத்திற்கு ஏற்ற வகையில் சவாரிகளை வழங்கி வரும் உலகின் மிகப் பெரிய நிறுவனமான Uber, அது இயங்கி வரும் ஆறு கண்டங்களிலுள்ள அனைத்து பயணிகளுக்கும், அவர்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்குடன் பொது விழிப்புணர்வு பிரச்சாரமான ‘உங்கள் சவாரியைச் சரிபாருங்கள்’ என்ற வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

ஒருவர் Uber உடன் சவாரி செய்யும் ஒவ்வொரு முறையும், செலுத்துநருடன் சரியான வாகனத்தில் ஏறுகிறார்களா என்பதை உறுதிப்படுத்தும் வகையில், அவர்களுக்கு செயலி (App) மூலம நினைவூட்டல்கள் அனுப்பப்படுகிறது. வாகன இலக்கத் தகடு, காரின் வகை மற்றும் செயலியில் வழங்கபட்ட செலுத்துநரின் புகைப்படம், ஆகியவை பொருந்துவதன் மூலம் அவற்றை சரி பார்க்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.

இந்தப் படிமுறைகளுக்கு மேலதிகமாக, பெயரை உறுதிப்படுத்தும்படி உங்கள் செலுத்துநரிடம் நீங்கள் கேட்கலாம். உங்களது ஓட்டுனர் உங்களது பெயரை அவருடைய App மூலம் பார்வையிடுவார் என்பதோடு, அவரது பெயர் உங்கள் App இல் காட்டப்படும். பெயர்களை பாதுகாப்பாக பரிமாறிக் கொண்டு, ‘அழைத்துச் செல்வதற்கு வந்துள்ள நீங்கள் யார்?’ என்று கேட்கலாம். செயலியில் உள்ள தகவல்கள் பொருந்தவில்லையானால் வாகனத்தில் ஏற வேண்டாம் ஏன வலியுறுத்திக் கூறும் ஆலோசனையுடன் சரியான கார் வரும்வரை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அல்லது சவாரியை இரத்துச் செய்து அது தொடர்பில் முறைப்பாடு (Report) மேற்கொள்ளுமாறு அறிவுத்தப்படுகின்றனர்.

Uber ஆனது எதிர்கால பயணிகளின் நலன் கருதி அடையாள மோசடி செய்யும் சாரதிகளை புகார் செய்வதை அதிகமாக ஊக்குவிக்கின்றது.

இந்த விடயம் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட Uber இன் இலங்கைக்கான தலைவர் அன்கித் குப்தா, ‘Uber மூலம் பயணிக்கும் நீங்கள், பயணத்தை ஆரம்பிக்க முன்னர் ஒவ்வொரு வேளையிலும் உங்கள் பயணத்தை சரிபார்க்க வேண்டும் என்பது எமது குறிக்கோளாகும். இந்தப் புதிய நினைவூட்டல் (Notification) முறையானது, ஒவ்வொரு முறையும் Uber இல் பயணம் செய்யும் போது மூன்று படிமுறைகளையும் பூர்த்தி செய்ய மக்களுக்கு நினைவூட்டுகின்றது.
பாதுகாப்புக்கு நாம் வழங்கும் முக்கியத்துவத்தின் அடிப்படையில், இது மற்றொரு பிரதான பார்வையிடல் மூலமான நினைவூட்டலாகும். அத்துடன் தொழில்நுட்பத்தின் மூலம் முன்னரைவிட பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றலாம் என்பது தொடர்பானதாகும்" என்று கூறினார்.

Uber பயணத்தின் போது, செலுத்துநர்கள், தங்களது பயணத்தினை அவர்களின் நெருக்கமானவர்களுடன் பரிமாறிக்கொள்ள முடியும் என்பதால், பயணிகள் தமது பாதுகாப்பை உணரும் வகையில் பல்வேறு பாதுகாப்பு உத்திகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சட்ட ரீதியிலான நடவடிக்கை தொடர்பிலும் உங்களை இணைக்க அவசர தொலைபேசி இலக்கம் இணைக்கப்பட்டுள்ளதோடு, உதவிகள் தேவைப்படும் போது, அவற்றை வழிநடத்தவும், உதவி வழங்கவும் செயலியில் பிரத்தியேகமான பாதுகாப்பு மையம் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன. இது வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் அனைத்து பயணங்களின் போதும் GPS கண்காணிப்பு மற்றும் பயணக் காப்பீடு போன்ற Uber இன் சில முக்கிய பாதுகாப்பு சலுகைகளால் கட்டமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளன.

Uber ஆனது, கடந்த பல ஆண்டுகளாக இவ்வகையான பாதுகாப்பு அம்சங்களை சேர்த்துக் கொண்டிருப்பதனால், உரிய வாகனத்தில் பயணம் செய்ய இந்த அம்சங்கள் மிக முக்கியமானவையாகும்.

செயலியில் காணப்படும் பாதுகாப்பு அம்சங்கள் உங்கள் பயணம் தொடர்பான முன்னறிவிப்புகளை சரிபார்க்கவும்: வாகனம் உங்களைச் அண்மிக்க முன்னர், உங்கள் பயணம் தொடர்பான படிமுறைகளை சரிபார்க்குமாறு புதிய நினைவூட்டல்கள் உங்களுக்கு வழங்கப்படுகிறது. இது தற்போது அமுலிலுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் பயண App பெனரை சரிபார்க்கவும்: சரியான பயணத்தை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதை அவர்களுக்கு நினைவூட்டுவதற்காக, வாகனத்துடன் சாரதி தயாரான தருணத்திலிருந்து தெளிவான தகவல் App மூலம் வழங்கப்படுகின்றது. இந்த நினைவூட்டல்கள் பல வாரங்களுக்கு வைத்திருக்கப்படும் என்பதோடு, அது காலத்துக்கு காலம் மாற்றப்படும்.

மூன்று படிமுறைகளை விளக்கும் Uber பயணத்தின் காணொளி

Uber பற்றி
நம்பிக்கையான போக்குவரத்தை அனைவருக்கும் சகல இடங்களுக்கும் பெற்றுக்கொடுப்பதே Uber இன் இலக்காகும். 2010 ஆம் ஆண்டில் நாம் மிகச்சிறிய தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அதாவது ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் பயணத்தைப் பகிர்ந்துகொள்வது எவ்வாறு என்ற கேள்விக்கு பதிலைத் தேடும் வகையில் எமது சேவை ஆரம்பிக்கப்பட்டது.

10 பில்லியனுக்கும் அதிகமான பயணங்களை தொடர்ந்து, மக்கள் எங்கே இருக்க விரும்புகின்றார்களோ அந்த இடத்திற்கு அவர்களை கொண்டு சேர்க்க தயாரிப்புக்களை வழங்கினோம். 

உணவுப் பொருட்கள், நகரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் எவ்வாறு வேறுபடுகின்றனர் என்பதனை கண்டறிந்து அதன் மூலம் Uber ஆனது புதிய சாத்தியங்களை உருவாக்கும் ஒரு தளமாக அமைகிறது.


Add new comment

Or log in with...