Friday, March 29, 2024
Home » மழையால் பெரும்போக நெற்செய்கை அழிவு
அம்பாறையில்

மழையால் பெரும்போக நெற்செய்கை அழிவு

by Gayan Abeykoon
January 24, 2024 6:56 am 0 comment

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்ட பெரும்போக நெற்செய்கை கடந்த சில வாரங்களாக பெய்த கன மழை காரணமாக அழிவுற்றுள்ளதுடன், இக்காணிகளின் உட்கட்டமைப்பும் எதிர்காலத்தில் நெற்செய்கை மேற்கொள்ள முடியாதளவுக்கு சேதமடைந்துள்ளதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.  

இம்மாவட்டத்திலுள்ள 29 கமநல சேவை பிரிவுகளில் 27 பிரிவுகளில் சுமார் 79 ஆயிரம் ஹெக்டேயரில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையில் 50 சதவீதமானவை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதாகவும், நெற்செய்கை காணிகளில் வெள்ளநீர் ஊடறுத்து சென்றதால் மணல்மேடு, சேறு, நீரோடை உருவாகி நெற்செய்கைக்கு பொருத்தமற்றதாக காணிகள் மாறியுள்ளதாகவும், விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனால் எதிர்வரும் சிறுபோக நெற்செய்கை பெரிதும் பாதிக்கப்படலாமெனவும், விவசாயிகள் மேலும் தெரிவித்தனர்.

இறக்காமம் தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT