விமல், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘கன்னி ராசி’ | தினகரன்

விமல், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘கன்னி ராசி’

விமல், வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள படம் ‘கன்னி ராசி’. எஸ்.முத்துக்குமரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜா சந்திரசேகர் இசையமைக்க, யுகபாரதி அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னிராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் விமல், பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வது என்ற லட்சியத்துடன் இருக்கிறார். இந்த நிலையில் விமல் வீட்டின் எதிர் வீட்டிற்கு வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். இரண்டு குடும்பத்தினரும் சந்தித்து கொள்ளும். அப்புரம் என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.


Add new comment

Or log in with...