தடை செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான ஸஹ்ரான் ஹாசிமினால் நுவரெலியாவில் நடாத்திச் செல்லப்பட்ட ஆயுத பயிற்சி மற்றும் சொற்பொழிவுகளில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், கெகுணகொல்ல, கட்டுபொத்த பிரதேசத்தைச் சேர்ந்த மொஹம்மது அப்துல் காதர் அசீம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
சந்தேகநபர், ஸஹ்ரான் ஹாசிமின் மனைவியின் மூத்த சகோதரர் எனவும், சந்தேகநபரின் தாயின் சகோதரியை நௌபர் மௌலவி என்பவர் திருமணம் முடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று (29) இரவு 10.35 மணியளவில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த நபரை கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொழும்பு குற்றப்பிரிவினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
Add new comment