Friday, March 29, 2024
Home » நீர்கொழும்பு ‘ஹிமா’ மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் பிரமுகர்கள் கௌரவிப்பு

நீர்கொழும்பு ‘ஹிமா’ மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் பிரமுகர்கள் கௌரவிப்பு

by Gayan Abeykoon
January 24, 2024 7:37 am 0 comment

நீர்கொழும்பு, ‘ஹிமா’  மகளிர் நலன்புரிச் சங்கத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட லிட்டில் ஸ்டார் விருது வழங்கல் நிகழ்வும் கம்பஹா மாவட்ட மாணவர்கள் மற்றும் உறுப்பினர்கள், பிரமுகர்கள் கௌரவிப்பு நிகழ்வும் அதன் தலைவி நஸ்மியா நஸ்மின் தலைமையில் நீர்கொழும்பு மாபிள் லீப் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் காவிந்த ஜெயவர்த்தன கலந்து கொண்டார். முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் திருமதி  நிரோசா அத்துக்கோரல, நீர்கொழும்பு   மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள்,  முன்னாள் பாடசாலை அதிபர்கள், பள்ளிவாசல் தர்மகர்த்தா சபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், கொழும்பு ஹூசைன் போல்ட் ஜனாசா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருதுகளும் பதக்கங்களும் சான்றிதழ்களும்  அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(அஷ்ரப் ஏ சமத்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT