2014 அலுத்‍கம, பேருவளை அசம்பாவிதங்களுக்கு இழப்பீடு | தினகரன்

2014 அலுத்‍கம, பேருவளை அசம்பாவிதங்களுக்கு இழப்பீடு

2014 அளுத்‍கம, பேருவளை அசம்பாவிதங்களுக்கு இழப்பீடு-ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைப்பு-Aluthgama-Beruwala-Compensation-Hizbullah

 

மீள்குடியேற்ற அமைச்சு ஒரு கோடியே 53 இலட்சம் ரூபாவை வழங்கியது

2014 ம் ஆண்டில் அலுத்கமமையிலும் பேருவளையிலும் இடம்பெற்ற மோதல் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள், உடலியல் சார்ந்த சேதங்கள் மற்றும் சொத்துக்களுக்கான சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு நேற்று (22) சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தலைமையில் இடம்பெற்றது.

மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

பிரஸ்தாப சம்பவம் காரணமாக ஏற்பட்ட 03 உயிரிழப்புகளுக்கும், 12 உடலியர்சார்ந்த சேதங்க ளுக்கும், 85 சொத்து இழப்புகளுக்குமான உரிய இழப்பீடுத் தொகைகள் நேற்று வழங்கப்பட்டன.

உயிரிழந்த ஒருவருக்காக அமைச்சரவை அங்கீகாரப்படி 20 இலட்சம் ரூபா வீதம் வழங்கப்ப டுவதுடன், இதனடிப்படையில், உயிரிழப்புகளுக்கான இழப்பீடாக 57 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது. (இதற்கு முன்னர் உயிரிழந்த ஒருவருக்கு இழப்பீடாக ஒரு இலட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது.)

உடலியல் சேதங்களுக்காக ஆளொருவருக்கு 05 இலட்சம் ரூபா வீதம் இழப்பீடாக வழங்க அமைச் சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதன் அடிப்படையில், 12 பேருக்கு இழப்பீடாக 58 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது. (இதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட மருத்துவ அறிக்கைகளின்படி 227,500 ரூபா தொகை இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது)

பிரஸ்தாப சம்பவம் காரணமாக ஒரு இலட்சம் ரூபாவிற்குக் குறைந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ள 95 சொத்துக் களுக்கான சேதங்களுக்குரிய இழப்பீட்டுத் தொகைகளும் இதன்போது வழங்கப்பட்டது. இதற்காக 36 இலட்சம் ரூபா தொகை இழப்பீடாக வழங்கப்பட்டது.

அந்த அடிப்படையில் உயிரிழப்புகள், உடலியல்சார் சேதங்கள் மற்றும் சொத்துக்களுக்கான சேதங்களுக்காக 153 இலட்சம் ரூபா இழப்பீடாக வழங்க புனர்வாழ்வு அதிகார சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அமைச்சின் செயலாளர் பி.சுரேஷ், இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி என்.கொடகந்த, புனர்வாழ்வு அதிகார சபையின் பணிப்பாளர் ஆனந்த விஜேபால ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

 


Add new comment

Or log in with...