அவசரகால சட்ட நீடிப்பு 40 வாக்குகளால் நிறைவேற்றம் | தினகரன்

அவசரகால சட்ட நீடிப்பு 40 வாக்குகளால் நிறைவேற்றம்

அவசரகால சட்ட நீடிப்பு 40 வாக்குகளால் நிறைவேற்றம்-Emergency Law Passed by 40 Votes

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான விவாதம் இன்று (31) நாடாளுமன்றத்தில் நடைபெற்றதோடு, இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிப்பு கோரியது.

அதற்கமைய இடம்பெற்ற வாக்களிப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 42 வாக்குகளும் எதிராக 02 வாக்குகள் மாத்திரம் கிடைக்கப்பெற்றன.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எஸ். ஶ்ரீதரன் எம்.பி விடுத்த கோரிக்கைக்கு அமைய இடம்பெற்ற வாக்கெடுப்பில், அக்கட்சியைச் சேர்ந்த இரு எம்.பிக்கள் அதற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

அரசாங்கத்துடன் இணைந்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அவசரகால நிலையை ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.


Add new comment

Or log in with...