சிலாபம் வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டம் | தினகரன்


சிலாபம் வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டம்

சிலாபம் வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டம்-Chilaw Minor Employees Protest

தற்போது நிலவும் சிற்றூழியர்களுக்கான பற்றாக்குறையை உடனடியாக நிரப்புமாறு  கோரி, சிலாபம் பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று (30) பிற்பகல் மருத்துவமனைக்கு முன்னால் இடம்பெற்ற போராட்டத்தில் பெருமளவிலான, சிற்றூழியர்கள் பங்குபற்றினர்.

மிக விரைவாக, வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், இதன்போது கோரிக்கை விடுத்திருந்தனர்.

சிலாபம் வைத்தியசாலைக்கு முன்பாக பகல் உணவு வேளையின் போது இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

(புத்தளம் தினகரன் விசேட நிருபர்)


Add new comment

Or log in with...