பருப்பு, கடலை போன்றவற்றுக்கான விசேட பொருட்கள் வரி 5 ரூபாவினாலும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.
அத்தோடு, சீனி ஒரு கிலோ பத்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொலைத் தொடர்புகள் சேவைகளுக்கு அதிக வரி விதிக்கப்படுவதைக் கருத்திற் கொண்டு தொலைத்தொடர்புகள் வரி 25 சதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள், தொழில்சார் நிபுணர்கள் மற்றும் வெளி நாடுகளில் தொழில் புரியும் தொழிலாளர்கள் அனுப்பும் பணம் வெளிநாட்டு நாணயத்தில் இருக்கு மானால் அதனை இலங்கைக்கு அனுப்பும் போது வருமான வரி விதிக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, எந்தவொரு நிதி நிறுவனத்திலும் பேணப்படும் சேமிப்பு அல்லது நிலையான வைப்பின் மீதான வட்டிக்கு அறவிடப்படும் தாமதித்தல் வரிக்கு விலக்களிக்கப்படும்.
Add new comment