Thursday, March 28, 2024
Home » சபைக்குள் தொலைபேசி பாவனை தடை செய்யப்பட வேண்டும்
பாராளுமன்ற நிலையியற் கட்டளையை திருத்தி

சபைக்குள் தொலைபேசி பாவனை தடை செய்யப்பட வேண்டும்

by sachintha
November 24, 2023 6:36 am 0 comment

கடுமையான தீர்மானம் எடுக்குமாறும் சபாநாயகரிடம் வலியுறுத்து

பாராளுமன்றத்தினுள் சபை நடவடிக்கைகளின் போது தொலைபேசிகளை பாவிப்பதை முதலில் தடை செய்யுமாறும் நிலையியற் கட்டளையை திருத்தி கடுமையான தீர்மானங்களை எடுக்குமாறும், நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (22) நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தினார்.

மக்களின் பிரச்சினை தொடர்பாக பேசுவதை விடுத்து, ஆளும் மற்றும் எதிர் தரப்பினருக்கு இடையிலான மோதல் தொடர்பாக ஆராயவே பாராளுமன்றத்தில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது.

இந்நிலைமைக்கு பிரதமர், சபாநாயகர் உட்பட ஒட்டுமொத்த உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அமைச்சர் மேலும் உரையாற்றிய போது,

“பாராளுமன்றத்தின் செயற்பாடுகளால் ஒட்டுமொத்த மக்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை மேன்மை பொருந்தியதாகவும் வெஸ்மினிஸ்டர் முறைமையுடையதென்று குறிப்பிடப்படுகிறது. ஆனால், இன்று பாராளுமன்றத்தில் கொள்கைகளுக்கு முரணான செயற்பாடுகள் மாத்திரமே இடம்பெறுகின்றன.

பாராளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேசுவதை விடுத்து, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான மோதல் தொடர்பாக காலையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறுகின்றன. இதற்கு அதிக காலம் செலவழிக்கப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளாலேயே மக்கள் பாராளுமன்றத்தை வெறுத்து, விமர்சித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதற்கு 225 உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டும்.

பாராளுமன்றத்தின் இன்றைய நிலைக்கு பிரதமர் உட்பட சபாநாயகரும் பொறுப்புக் கூற வேண்டும். பாராளுமன்ற விவாதத்தை மக்கள் விரும்பி பார்த்த காலமும் உண்டு. ஆனால், இன்று பாராளுமன்றம் தொடர்பான விமர்சனங்கள் மாத்திரமே முன்வைக்கப்படுகின்றன. பாராளுமன்றத்தை பார்வையிட வரும் மாணவர்கள் எதைக் கற்றுக்கொள்கிறார்கள் என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT