அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினையை ஆராய விசேட சம்பள ஆணைக்குழு | தினகரன்

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினையை ஆராய விசேட சம்பள ஆணைக்குழு

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினையை ஆராய விசேட சம்பள ஆணைக்குழு

 

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பில் ஆராய விசேட சம்பள ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசாங்க ஊழியர்கள் மற்றும் புகையிரத சேவை உள்ளிட்ட சம்பள முரண்பாடுகள் காணப்படும் சேவைகள் தொடர்பில் ஆராய்ந்து, இரு மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை வழங்கும் வகையில் குறித்த ஆணைக்குழுவை நியமிக்க, நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று (14) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அரச சேவையில் தற்போது காணப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள சம்பள சுற்றறிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தி, அதன் மூலம் அரச சேவையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து, உரிய பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக, இவ்வாணைக்குழுவுக்கு இரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய, புகையிரத சேவை உள்ளிட்ட சம்பள பிரச்சினை காணப்படும் அரச நிறுவனங்களின் சம்பள முரண்பாடுகளை களைந்து, அனைத்து அரச சேவைகள் தொடர்பிலும் அங்கீகரிக்கப்பட்ட சம்பள முறைமையை அறிமுகப்படுத்த, அரசாங்கம் இதன் மூலம் எதிர்பார்ப்பதாக, நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 


Add new comment

Or log in with...