அரிசி ரூ. 70; இன்று நள்ளிரவு முதல் அமுல் | தினகரன்

அரிசி ரூ. 70; இன்று நள்ளிரவு முதல் அமுல்

 
இன்று நள்ளிரவு (07) முதல் அமுலாகும் வகையில் அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
 
தற்போதுள்ள சந்தை விலைகளின் அடிப்படையில், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அரசாங்கம் உச்ச விலையை நிர்ணயித்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
 
1 கிலோ கிராம் சம்பா அரிசி - ரூபா 80
1 கிலோ நாட்டரிசி - ரூபா 70
1 கிலோ கிராம் பச்சை அரிசி - ரூபா 70
 
என உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படுவதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோன்று, குறித்த விலையிலும் பார்க்க அதிக விலையில் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.
 

Add new comment

Or log in with...