மண்ணெண்ணெய் விலை குறைப்பு | தினகரன்

மண்ணெண்ணெய் விலை குறைப்பு

 
இன்று (10) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மண்ணெண்ணெயின் விலை ரூபா 5 இனால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
 
அதன் அடிப்படையில், தற்போது ரூபா 49 ஆகவுள்ள மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலையை ரூபா 44 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமமைச்சு இன்று விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
 
2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுக்கமைய ஜனவரி மாதம் முதலே குறித்த விலைக்குறைப்பு அமுலாகும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
குறித்த விலைக் குறைப்பு தொடர்பில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
 

Add new comment

Or log in with...