உயர்தர பரீட்சார்த்திகளுக்கு அறிவித்தல் | தினகரன்

உயர்தர பரீட்சார்த்திகளுக்கு அறிவித்தல்

இம்முறை க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளை இணையத்தளம் மூலமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள சகல மாணவர்களின் அனுமதி அட்டைகள்  ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

பாடசாலை பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் ஏற்கெனவே பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, தனிப்பட்ட  பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் அவர்களின் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள், நாளை மறுதினம்  பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk எனும் இணையத்தில் காட்சிப்படுத்தப்படும் என்பதோடு, அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத பரீட்சார்த்திகள் அதனை பயன்படுத்த முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கமைய 337,704 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர் என்பதோடு, க.பொ.த. உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் ஓகஸ்ட் 05 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.


Add new comment

Or log in with...