Home » கற்பிட்டி பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் விழா நிகழ்வு

கற்பிட்டி பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் விழா நிகழ்வு

by gayan
January 23, 2024 6:20 am 0 comment

இவ்வருடத்துக்கான தைப்பொங்கல் விழா கற்பிட்டி பிரதேச செயலகத்தில் நிருவாக உத்தியோகத்தர் எஸ்.மர்ஜானா தலைமையில் அண்மையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

பொங்கல் விழா என்பது உலக வாழ் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இவ் விழா தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்கள், மாவட்டங்கள் மற்றும் நாடுகள் போன்றவற்றில் வாழும் அனைத்து இடங்களிலும் கொண்டாடப்படுகிறது. மேலும் பொங்கல் விழா உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் நன்றி செலுத்தும் முகமாகக் கொண்டாடப்படுகிறது.

கல்பிட்டி பிரதேச செயலக வளாகத்தில் மாவிலை மற்றும் தென்னோலை தோரணங்கள் போடப்பட்டு மூவின மக்களின் பங்குபற்றுதலோடும், பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்கேற்போடும் மிக விமரிசையாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

(புத்தளம் தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT