இலங்கை அணி வெற்றி; மாலிங்க விடை பெற்றார்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 03 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இதற்கமைய 91 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

இதற்கமைய முதலில் களம் இறங்கிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 314 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா 111 ஓட்டங்களையும் அஞ்சலோ மெத்தியூஸ் 48 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் சைபுல் இஸ்லாம் மற்றும் முஸ்தபிஸுர் ரஹ்மான் ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி,41.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.  இதற்கமைய,இலங்கை அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது. 

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில்,லசித் மாலிங்க மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் தலா 03 விக்கெட்டுக்களையும்  தனஞ்சய டி சில்வா 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

லசித் மாலிங்க சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 338 விக்கெட்டுக்களை வீழ்த்தி சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து நேற்றுடன் விடை பெற்றார்.

 


Add new comment

Or log in with...