பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் நேற்று வெளியாகின

2018  பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் நேற்று வெளியாகின. இதற்கமைய உயர்தரத்தில் சித்தியடைந்த 30 ஆயிரத்து 830 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.  

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வெட்டுப்புள்ளிகளுக்கமைய 2018/2019 கல்வியாண்டில் உயிரியல் விஞ்ஞான பீடத்துக்காக 6,992 மாணவர்களும் பெளதீக விஞ்ஞான பீடத்துக்காக 5,684 மாணவர்களும்   வர்த்தக பீடங்களுக்காக 6,015 மாணவர்களும் கலை பீடத்துக்காக 9,399 மாணவர்களும் பொறியியல் தொழில்நுட்ப பீடத்துக்காக 1,361மாணவர்களும் உயிரியல் கட்டமைப்பு தொழில்நுட்ப விஞ்ஞான பீடங்களுக்காக 994 மாணவர்களும் ஏனைய பீடங்களுக்காக 385 மாணவர்களும் உள்வாங்கப்படவுள்ளனர். 

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இவ்வருடம் மேலதிகமாக 645 மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். 17/18  கல்வியாண்டில் 2,67,202 மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்டிருந்தனர்.  வெட்டுப்புள்ளிகளை www.selection.ugc.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும். அல்லது 0112695301 / 0112695302 / 0112692357 / 01126975854 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கூடாக தொடர்புகொள்வதன் மூலம் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.


Add new comment

Or log in with...