நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு | தினகரன்


நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு

நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு-Journalism Workshop

நல்லிணக்கப் பொறிமுறையை மற்றும்  நிலைமாறுகால நீதியை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்தினால் இதுவரை எடுக்கப்பட்ட வழிவகைகள் மற்றும்  செயற்பாடுகள் சம்பந்தமாக பிரதேச ஊடகவியலாளர்களுக்கு விழிப்பூட்டும் செயலமர்வு ஒன்று இடம்பெறவுள்ளது.

இச்செயலமர்வானது நாளை (26) வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரையுள்ள காலப்பகுதியில் மட்டக்களப்பு முனை ஒழுங்கை, சின்னா உப்போடை வீதியில் அமைந்துள்ள ஈஸ்ற் லகூன் ஹோட்டலில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த  ஊடகவியலாளர்களுக்கான இச்செயலமர்வு, நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தினால் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிங்களம், தமிழ்மொழி மூலம் விரிவுரைகள் இடம்பெறவுள்ள இச்செயலமர்வில் கலந்து கொள்ளும்படி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

(வெல்லாவெளி தினகரன் நிருபர் - க. விஜயரெத்தினம்)


Add new comment

Or log in with...