தெற்காசியாவில் கடும் மழை: உயிரிழப்பு 650 ஆக உயர்வு | தினகரன்


தெற்காசியாவில் கடும் மழை: உயிரிழப்பு 650 ஆக உயர்வு

தெற்காசிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள பருவமழையால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 650 ஐ தாண்டியிருப்பதோடு, 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவசரகாலத் திட்டங்களைச் செயல்படுத்தாதது, வடிகால் வசதிகள் இல்லாதது, தகுந்த நிவாரண வசதிகள் இல்லாதது போன்றவை உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்குக் காரணம் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.

இம்மாதம் ஆரம்பித்த கடும் மழையால் இந்தியாவில் குறைந்தது 467 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா, கர்நாடகா, மேற்கு வாங்காளம், சிக்கிம் ஆகிய பகுதிகளில் வரும் நாட்களில் கடும் மழையை எதிர்பார்க்கலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வெள்ளத்தாலும் மின்னல் தாக்கத்தாலும் பங்களாதேஷில் 97 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தில் இதுவரை 90 பேர உயிரிழந்திருப்பதோடு 29 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த பருவமழை காரணமாக பாகிஸ்தானில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிராந்தியத்தின் நீர் ஆதாரங்களுக்கு இந்தப் பருவப்பெயர்ச்சி தீக்கமாக அமைகின்றபோது அது உயிர்களை காவுகொள்ளும் ஆபத்துக் கொண்டதாகவும் உள்ளது.


Add new comment

Or log in with...