ரி56 ரக துப்பாக்கிகள் காணாமல் போன விசாரணை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு | தினகரன்

ரி56 ரக துப்பாக்கிகள் காணாமல் போன விசாரணை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் ரி56 ரக துப்பாக்கிகள் இரண்டு காணாமல் போனமை தொடர்பான  விசாரணையை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடந்த06 ஆம் திகதி குறித்த பொலிஸ் நிலையத்திலிருந்து  ரி56 துப்பாக்கிகள் இரண்டு காணாமல் போயிருந்தன.

இது தொடர்பான முதற்கட்ட விசாரணை, மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. 

இது தொடர்பில் பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் பிரபாத் பரணவிதான பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, மேலும் 11 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...