கடும் வெப்ப அலையால் அமெரிக்காவில் பாதிப்பு | தினகரன்


கடும் வெப்ப அலையால் அமெரிக்காவில் பாதிப்பு

அமெரிக்காவின் மூன்றில் இரண்டு பங்கு வட்டாரங்களை வெப்ப அலை தாக்கியுள்ளது. அதனால் மத்திய மேற்கு, கிழக்குக் கடற்பரப்பில் 200 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மில்லியன் கணக்கான குடியிருப்பாளர்கள் அதிக வெப்பத்தையும் அதேவேளை அதிக ஈரப்பதத்தையும் சமாளிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வெப்பம் தொடர்பான சம்பவங்கள் காரணமாக குறைந்தது 12 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை விவேகமாகவும் அமைதியாகவும் இருக்கும்படி தேசிய வானிலை சேவை நிலையம் குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. நேரடி சூரிய ஒளியில் இருந்து விலகி நீரேற்றத்துடன் இருக்கவும் அது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சில இடங்களில் வெப்பநிலை வார இறுதியில் 46 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது. நாட்டின் தலைநகரான வொஷிங்டனில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்தது.


Add new comment

Or log in with...